போராட்டங்களில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை : இந்திக அனுருத்த 

Published By: R. Kalaichelvan

26 Feb, 2020 | 05:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் இலாபத்தை கருத்திற் கொண்டு கடந்த அரசாங்கத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இன்று அரசாங்கத்திற்கு நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளன. போராட்டங்களில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை குறித்து துறைசார் அடிப்படையில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசியல்  இலாபத்தை நோக்கத்திற்காக வழங்கிய நியமணங்கள் தேர்தல் சட்டத்திற்கு முரண் என்ற அடிப்படையிலும், அரச தொழில் வாய்ப்பு பிரிவின் கொள்கைகளுக்கு முரண் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

 தற்போது தொழில் வாய்ப்புக்களில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு  ஒப்பந்த அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஓப்பந்த காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்கள் குறித்த தொழிலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அதற்கும் ஆட்சிக்கு வந்து 3 மாதங்களை கடந்துள்ள அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இவர்கள் இன்று பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இவை அரசாங்கத்திற்கு நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளன.

2000 ற்கும் அதிகமான இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இவர்களில் 250-300ற்கும் இடையிலானோரே மீண்டும் ஒப்பந்த காலத்தை புதுப்பிக்குமாறு  விண்ணப்பித்துள்ளார்கள்.

மிகுதியானவர்கள் நிரந்தர சேவையினை வழங்க கோருகின்றார்கள். இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஒவ்வொரு  அமைச்சுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்கு இளம் தலைமுறையினரது  பங்களிப்பு பாரிய பலமாக அமைந்தது. இளைஞர்களுக்கு அநீதி இழைக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட நியமணங்கள் முறையற்றதாகும். இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை விரைவில் முன்னெடுக்கும். என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22