சுதந்திர கட்சி தற்போது ஒழுக்கமான பாதையிலேயே பயணம் செய்கிறது : தயாசிறி 

Published By: R. Kalaichelvan

26 Feb, 2020 | 03:47 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைக் குறை கூறி அவர்களுடன் இணையுமாறு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் அவரது கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் கமத்தொழில் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, சுதந்திர கட்சி தற்போது ஒழுக்கமான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. எனவே நாம் ஐ.தே.கவுடன் சென்று இணைய வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்தது நாம் இழைத்த வரலாற்று தவறாகும். சுதந்திர கட்சியிலிருந்த ஒருசிலர் ஐ.தே.கவுடன் இணைந்து கொண்டனர் என்பதற்காக முழு கட்சியுடன் அவர்களுடன் இணையாது என்றும் தயாசிறி மேலும் தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையைப் பெறும் என்று கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு குறைந்தது 75 ஆசனங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் போகும். எனவே அவர்களுடன் சுதந்திர கட்சியை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது வேடிக்கையான விடயமாகும். நாம் ஒரு போதும் அவ்வாறு இணையப் போவதுமில்லை என்பதை சஜித் பிரேமதாசவிடம் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ரவுப் ஹக்கீம் , ரிஷாத் பதியுதீன் போன்றோர் இதற்கு முன்னரும் பலமிக்க ஒரு அணியாக இருக்கவில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு இருக்கப் போவதில்லை. ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தால் மாத்திரமே அவர்களால் வெற்றி பெற முடியும். எனவே அவர்கள் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் , கூட்டணியமைத்து போட்டியிட்டாலும் எமக்கு சவாலாக இருக்க மாட்டார்கள்.

சு.க - பொதுஜன பெரமுன கூட்டணி

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் முதலாவது மத்திய குழு கூட்டம் முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அமைச்சர் தினேஷ் குணவர்தன புதிய கூட்டணியின் பிரதி தலைவராக ஏகமனதாக அறிவிக்கப்பட்டார். அத்தோடு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் உப தவிசாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை திலங்க சுமதிபாலவினால் முன்வைக்கப்பட்டது.

இதில் 5 தமிழ் கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் எம்முடன் கைகோர்த்துள்ளன. இந்த கூட்டணிக்குள் எந்த சந்தர்ப்பத்திலும் பிளவுகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40