தெஹி­வளை – கல்­கிசை மாந­கர சபை பிரிவில் அர­சியல் அநா­தை­க­ளாகத் தமி­ழர்கள்

Published By: J.G.Stephan

26 Feb, 2020 | 12:21 PM
image

கொழும்பு மாவட்­டத்தில் கொழும்பு மாந­கர சபை எல்­லைக்குத் தெற்­கேயும், மொரட்­டுவ மாந­கர சபை எல்­லைக்கு வடக்­கேயும் அமைந்­துள்­ளது தெஹி­வளை –கல்­கிசை மாந­கரம். அதன் மேற்கு எல்­லை­யாக கடலும், கிழக்கு எல்­லை­க­ளாக மக­ர­கம மாந­கர சபை மற்றும் பொர­லஸ்­க­முவ நக­ர­ச­பையும் அமைந்­துள்­ளன.

தெஹி­வளை– கல்­கிசை மாந­கர எல்­லைக்குள் பெளத்த மக்­க­ளுக்கு உள்­ளதைப் போன்று இந்துத் தமி­ழர்­க­ளுக்கும் பல வர­லாற்றுச் சிறப்­புக்கள் நிறை­யவே உள்­ளன. ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட தமி­ழர்­களின் பண்­டைய இருப்பை வெளிப்­ப­டுத்தும் திரு­நந்­தீஸ்­வரம் என்ற சிவா­லயம் இப்­ப­கு­தி­யி­லுள்ள இரத்­ம­லா­னையில் சிறப்­பித்துக் கூறத்­தக்­க­தா­யுள்­ளது.

தெஹி­வளை– கல்­கிசை மாந­கர எல்­லைக்குள் தெஹி­வளை மற்றும் இரத்­ம­லானை ஆகிய இரு தேர்தல் தொகு­திகள் உள்­ளமை போன்று அதே பெயர்­களைக் கொண்ட இரு பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் இயங்­கு­கின்­றன.

இவ்­விரு பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் சிங்­கள மொழி­யுடன் தமிழ் மொழிக்கும் இணைந்த சம­வு­ரி­மை­யுள்ள செய­லகப் பிரி­வு­க­ளென்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சாலை (களு­போ­வில) தேசிய மிரு­கக்­காட்­சிச்­சாலை என்­ப­னவும் இம்­மா­ந­கர சபை எல்­லை­யி­லேயே உள்­ளன. காலி வீதி இப்­பி­ர­தே­சத்தை ஊட­றுத்துச் செல்லும் பிர­தான வீதி­யாகும்.

இம்­மா­ந­கர சபை எல்­லைக்­கு­ள்ள பிலி­யந்­தலை கல்வி வல­யத்தில் கொழும்பு– இரத்­ம­லானை இந்துக் கல்­லூரி, தெஹி­வளை தமிழ் மகா வித்­தி­யா­லயம், நுகே­கொடை தமிழ் மகா வித்­தி­யா­லயம் ஆகிய மூன்று தமிழ்ப்­பா­ட­சா­லைகள் இயங்­கு­கின்­றன.

கல்விப் பொதுத்­த­ரா­தரப் பத்­திர உயர்­தர வகுப்­புகள் வரை கொண்ட இப்­பா­ட­சா­லை­களில் இரத்­ம­லானை இந்துக் கல்­லூ­ரியில் இல­வ­ச­மாக இயங்கும் மாணவர் விடுதி அகில இலங்கை இந்து மாமன்­றத்தால் நடத்­தப்­பட்டு வரு­வ­துடன் பாட­சா­லையால் நிர்­வ­கிக்­கப்­படும் மாணவ விடு­தி­யொன்றும் செயற்­ப­டு­கின்­றது.

தெஹி­வளை தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­துக்­கு­ரிய காணியின் மூன்றில் ஒரு பகுதி வெளி­யாரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு வீடு­களும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளதால் இட­வ­சதி போதி­ய­தா­யில்லை. ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள காணியை மீளப்­பெற நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

திரு­நந்­தீஸ்­வரம் என்ற பழம்­பெரும் சிவா­லயம் இரத்­ம­லா­னை­யி­லுள்­ளது. 1518 இல் போர்த்­துக்­கே­யரின் ஆக்­கி­ர­மிப்பின் போது சிதைத்து அழிக்­கப்­பட்ட இவ்­வா­லயம் இன்று மீள­மைப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வா­லய வளவில் முருகன் ஆல­ய­மொன்றும் உள்­ளது. குறித்த திரு­நந்­தீஸ்­வரர் ஆலயம் தொடர்பில் தொட்­ட­க­முவ இரா­கு­ல­தேரர் தனது “சல­லி­ஹினி சந்­தே­சய” என்ற சிங்­கள மொழி­யி­லான காவிய நூலில் குறிப்­பிட்­டுள்ளார்.

1454 இல் அதா­வது போர்த்­துக்­கேயர் இந்­நாட்டை ஆக்­கி­ர­மிப்­ப­தற்கு முன்பு அக்­கா­விய நூல் எழு­தப்­பட்­டுள்­ளது. அதில் சிவா­லய வழி­பாட்டு முறைகள் பற்றிக் கூறப்­பட்­டுள்­ள­துடன் மக்கள் விரும்பும் இனி­மை­யான தமிழில் தோத்­தி­ரங்கள் பாடு­வார்கள் என்றும் ராகு­ல­தேரர் குறிப்­பிட்­டுள்ளார். இதன் மூலம் சுமார் ஆறு நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்­னரே இப்­ப­கு­தியில் இந்துத் தமி­ழர்கள் சிறப்­பு­டனும் வளத்­து­டனும் வாழ்ந்­தார்கள் என்ற வர­லாற்று ஆதாரம் உண்மையை வெளிப்­ப­டு­த்துகின்­றது.

அது­மட்­டு­மல்ல இவ்­வா­லயத்தை அண்­டிய பகு­தி­களில் நிலத்தை வேறு தேவை­க­ளுக்­காக அகழ்ந்­த­போது நிலத்தின் அடி­யி­லி­ருந்து பல இந்துத் தெய்­வங்­களின் திரு­வு­ருவச் சிலைகள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை  ஆய்வு செய்த தொல்­பொ­ரு­ளியல் ஆய்­வாளர் கலா­நிதி செனரத் திசா­நா­யக்க அவை ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் முற்­பட்­ட­வை­யென்றும் சோழர் காலத்தைச் சேர்ந்­தவை என்றும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

பல நூறு ஆண்­டுகள் பழைமை கொண்­ட­தாகக் கணிக்­கப்­படும் தெஹி­வளை நெடுமால் வெங்­டேஸ்­வரப் பெருமாள் கோயில், தெஹி­வளை ஆஞ்­ச­நேயர் கோயில், படோ­விட்ட முத்­து­மா­ரி­யம்மன் கோயில், படோ­விட்ட கரு­மா­ரி­யம்மன் கோயில் என்­பன குறிப்­பி­டத்­தக்க இந்துக் கோயில்­க­ளாகும்.

இவற்­றுடன் இப்­ப­கு­தி­யி­லுள்ள சகல பெளத்த விகா­ரை­க­ளிலும் இந்துத் தெய்­வங்கள் வழி­பாட்­டுக்­கு­ரி­ய­வை­யா­யுள்­ளன. பெளத்த விகா­ரை­களில் விநா­யகர், முருகன், அம்மன், விஷ்ணு ஆகிய இந்துத் தெய்­வங்­களை வழி­பட முடி­கின்­றது. இங்­குள்ள மங்­க­ளா­ரா­மய விகா­ரையில் சிவ­பெரு­மானின் திரு­வு­ரு­வமும் வழி­பாட்­டிற்­கு­ரி­யதாயுள்­ளது.

இம்­மா­ந­கர சபை எல்­லைக்குள் பரந்­து­வாழும் தமி­ழர்கள் அர­சியல் ரீதியில் கைவிடப்­பட்­ட­வர்­க­ளா­கவே­யுள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. கொழும்பு மாவட்ட தமிழ்ப் பாரா­ளு­மன்ற மற்றும் மாகாண சபை உறுப்­பினர் தெரிவை உறு­திப்­ப­டுத்­து­வதில் பாரிய பங்­க­ளிப்பை வழங்­கி­வரும் தெஹி­வளை– கல்­கிசை  மாந­கரத் தமிழ் மக்­க­ளுக்குக் குறித்த மாந­கர சபையில் ஒரு பிர­தி­நி­தித்­து­வ­மா­னது இல்­லாமை கவ­லைக்­கு­ரி­யது. மாந­கர சபையின் மொத்த உறுப்­பி­னர்கள் நாற்­பத்­தெட்டு (48) பேர். அவர்­களில் வட்­டார ரீதி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்கள் இரு­பத்­தொன்­பது பேர். தமிழர் இரு­வரைத் தெரிவு செய்யக்கூடி­ய­தாக உரு­வாக்­கப்­பட்ட வட்­டா­ரங்கள் இரண்­டும் அதில் அடக்கம்.

அது மட்­டு­மல்ல குறைந்­தது ஆறு தமி­ழர்கள் விகி­தா­சார அடிப்­ப­டையில் பிர­தி­நி­தி­க­ளாகத் தெரிவு செய்­யக்­கூ­டிய வாய்ப்பும் உள்­ளது. இருந்­த­போ­திலும் எந்­த­வொரு அர­சியல் கட்­சியும் தமிழர் பிர­தி­நி­தித்­து­வங்கள் பற்றி அக்­கறை செலுத்­த­வில்லை. தமிழர் பிர­தி­நி­தித்­துவம் பெறத்தக்­க­தாக வரை­யறை செய்­யப்­பட்ட வட்­டா­ரங்­க­ளி­லிருந்து பெரும்­பான்மை இனத்­த­வரே தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். தமிழர் பிர­தி­நி­தித்­துவம் பெறப்­ப­டா­மைக்­கான காரணம் தமிழர் தரப்பின் மெத்­தனப் போக்­கே­யாகும்.

ஒரு பிர­தே­சத்தில் வாழும் மக்­களின் இருப்பை உறு­திப்­ப­டுத்தி வெளிப்­ப­டுத்­து­வது அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள அர­சியல் நிர்­வாக அமைப்­பு­களில் அம்­மக்கள்  பெற்றுக்கொள்ளும் பிர­தி­நி­தித்­து­வங்­களே. தெஹி­வளை– கல்­கிசை மாந­கர சபை எல்­லைக்குள் கணி­ச­மான அளவில் தமி­ழர்கள்  நிரந்­த­ரமாக வாழ்ந்­த­போ­திலும் மாநகர சபைக்கு வரி செலுத்துபவர்களாக இருந்தபோதிலும் தமக்கென தாம் சார்ந்த தமக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரு பிரதிநிதித்துவமாவது இல்லாதிருப்பது அரசியல் ரீதியில் அவர்களை (தமிழர்களை) அநாதைகளாக்கியுள்ளது.

மாநகர சபையால் பெற்றுக்கொள்ளக்­கூடிய உரிமைகள் மற்றும் சலுகைகளை உரியபடி அனுபவிக்க, அச்சபையில் கேட்டுப்­பெற தமிழர் பிரதிநிதிகள் எவரும் இல்லை. தமிழ் மக்களின் குறைகளைக் கண்டறிந்து எடுத்துக் கூறும் பிரதிநிதித்துவங்கள் தெஹிவளை, கல்கிசை மாநகர சபையில் இல்லாமை பாரிய குறைபாடாகவேயுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாற்று இருப்பைக்கொண்ட இப் பிரதேச தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாகியிருப்பது பற்றிச் சிந்திக்கவேண்டும்.

– த. மனோகரன் – 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04