இன்று திருநீற்றுப் புதன் ! “மண்­ணி­லி­ருந்து பிறந்த நாம் மண்­ணுக்கே திரும்­புவோம்”

Published By: Daya

26 Feb, 2020 | 11:33 AM
image

“மண்­ணி­லி­ருந்து உலகில் பிறந்த மனிதா நீ மண்­ணுக்­கேதான் திரும்ப வேண்டும் ஒருநாள்...” பாடல் ஒலிக்க, திரு­நீற்றுப் புதனை இன்று கிறிஸ்­த­வர்­க­ளா­கிய நாம்  எதிர்­கொள்­கின்றோம்.  இன்­றி­லி­ருந்து இயே­சுவின் திருப்­பா­டு­களைத் தியா­னிக்க நாம் அழைக்­கப்­ப­டு­கின்றோம்.

மானி­ட­ரா­கிய எம்மை பாவத்­தி­லி­ருந்து மீட்க, மனி­த­னாக இவ்­வு­லகில் அவ­த­ரித்தார் கிறிஸ்து.  தந்­தையின் சித்­தத்தை ஏற்றுக் கொண்ட இயேசு, சிலுவை சுமந்தார், பாடு­கள்­பட்டு, சிலு­வையில் அறை­யப்­பட்டு மரித்தார். இதைத்தான் நாம் இன்­றி­லி­ருந்து நினை­வு­கூர்­கின்றோம்.

நாற்­பது நாட்கள் வனாந்­த­ரத்­திலே இயேசு நமக்­காக உண்ணா நோன்­பி­ருந்தார். இதனை நினை­வு­கூ­ரவே நாமும் இன்­றி­லி­ருந்து நாற்­பது நாட்கள் உப­வா­ச­மி­ருந்து ஆண்­டவர் கிறிஸ்­துவை மகி­மைப்­ப­டுத்­துவோம்.

பாவ வாழ்­வி­லி­ருந்து நாம் நம்மை விலக்கிக்கொள்­வ­தையே இறை இயேசு விரும்­பு­கிறார்; ஆசிக்­கின்றார். தாம் எவ்­வாறு, தமது தந்­தையின் ஆணைப்­படி வாழ்ந்­தாரோ, அதையே தாம் நம்­மி­டமும் அவர் எதிர்­பார்க்­கின்றார்.

ஆனால் நடப்­ப­தென்ன?  எமது அன்­றாட வாழ்வை நாம் சிறிது மீட்டிப் பார்ப்போம்.

இறை­வ­னுக்கு ஏற்­பு­டை­ய­தாக நமது வாழ்வு அமைந்­தி­ருக்­கி­றதா என்றால், இல்லை என்ற பதிலே எமக்குக் கிடைக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. இறை இயே­சு­வுக்கு எதி­ரான மாபா­த­கங்கள் அனைத்தும் எம் வாழ்வில் நிகழ்ந்துகொண்­டுதான் இருக்­கின்­றன. பொய், திருட்டு, புறம் பேசுதல், பழி தீர்த்தல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இத்­த­கைய பாவங்­களை எம் வாழ்­வி­லி­ருந்து நாம் ஒழிக்க வேண்டும்.  நம் உடன்­பி­றப்­புக்­களை, அய­லாரை அன்பு செய்ய வேண்டும். மனம் மாற வேண்டும்; மனந்­தி­ருந்தி வாழவேண்டும்.  நம்­மிடம் இயேசு கேட்­பது, மன மாற்­றம் தான். நம் மனதின் அழுக்கைக் களைந்து விட்டு, முழு­மை­யாக பரி­சுத்­த­ம­டைய வேண்டும், பாவத்­தி­லி­ருந்து மீள வேண்டும்  என்­ப­தையே அவர் விரும்­பு­கிறார்.

அதை­விட்டு, தவக்­கா­லத்தில் மட்டும் ஒறுத்தல் செய்து, பரி­சுத்­த­வா­னாக வாழ்ந்­து­விட்டு  மீண்டும் செய்த தவ­றையே செய்ய ஆரம்­பிப்­ப­தல்ல.

தவக்­கா­லத்தின் நாற்­பது நாட்­களும் நாம் என்ன செய்­கின்றோம்..? இறை­ இ­யே­சு­வுக்கு எதி­ரா­கத்­தானே பாவம் செய்­கின்றோம். இதி­லி­ருந்து நாம் வெளியே வருவோம். நம்மை  முழு­மை­யாக மாற்றிக் கொள்வோம்.  நிச்­சயம் இயேசு, எம்மை மன்­னிப்பார், எம்மை ஏற்றுக்கொள்வார்.

என் மீட்பர் இரத்தம் சிந்­தினார்; நான் பரி­சுத்­த­மானேன், அவர் எனக்­காக  மரித்­தெ­ழுந்தார்; நான் மறு­ரூ­ப­மானேன். - இதுதான் நாம் இன்­றைய நாளில் நம் உள்­ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்­டிய சிந்­தனை.

ஆம்... நமக்­காக இயேசு இவ்­வு­லகில் மனி­த­னாகப் பிறந்தார், பாடுகள் ஏற்றார், மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்­தெ­ழுந்தார்...இதுதான் தவக்­கா­லத்தில் நாம் சிந்­திக்க வேண்­டிய தியானம்.

கடந்த வருடம் குருத்­தோலை ஞாயிறு தினத்­தன்று ஆல­யத்தில் வழங்­கப்­பட்ட தென்னை ஓலை­களால் செய்­யப்­பட்ட சிலு­வை­களை வீடு­க­ளி­லி­ருந்து பெற்று, ஆல­யத்தில் அவற்றை எரித்துப் பெறப்­படும் சாம்­பலே இன்­றைய நாளில் நம் நெற்­றியில் பூசப்­ப­டு­கி­றது.

“மண்ணாய் பிறந்த மனிதா, நீ மண்­ணுக்கே திரும்­புவாய்” என்­ற­வாறே அருட்­தந்­தை­யர்கள் எம் நெற்­றியில் திரு­நீறு பூசு­கி­றார்கள்.

ஆம், இம்­மண்ணில் பிறந்த நாம், மரித்து மீண்டும் மண்­ணுக்­குள்­ளேதான் புதைக்­கப்­ப­டு­கின்றோம். எந்த நேரமும் எம்மை மரணம் ஆட்­கொள்­ளலாம்...மண்ணுக்கே திரும்பலாம்...நாம் வாழும் இந்த இடைப்பட்ட காலத்தில் பாவம் செய்யாதிருக்க முயற்சிப்போம். இன்றிலிருந்து எமது சிந்தனை தொடரட்டும்.

இந்நாளில், இயேசுவின் பின்னால் நாமும் செல்வோம், அவர் வழியில் வாழ்வோம், வாழ்வில் புத்தொளி பெறுவோம்.

-சந்திரா – 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04