தினேஷ் இன்று ஜெனிவாவில் உரை ; அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­விப்பார்  

Published By: Daya

26 Feb, 2020 | 10:59 AM
image

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின்  43 ஆவது கூட்டத் தொடரில் இன்று ஜெனிவா நேரப்­படி காலை 10 மணிக்கு  உரை­யாற்­ற­வுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன நேற்று பிற்­ப­கல் ஜெனிவா வந்­த­டைந்தார்.

இலங்­கையின் சார்பில் ஜெனிவா  பேர­வையில் இன்று உரை­யாற்­ற­வுள்ள  அமைச்சர் தினேஷ்  இலங்­கை­யா­னது 2015ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 என்ற  பிரே­ர­ணைக்­கான அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக  அறி­விக்­க­வி­ருக்­கிறார்.   ஒரு நீண்ட உரையை இன்­றைய தினம்   அமைச்சர்  தினேஷ் குண­வர்த்­தன நிகழ்த்­த­வுள்ளார்.  

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின்  43 ஆவது கூட்டத்  தொடர் நேற்று முன்­தினம் ஆரம்­ப­மா­னது.  ஆரம்ப  அமர்வில்  இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார செயலர்  ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர்  கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.     ஐ.நா.  செய­லாளர் நாயகம்   அன்­ரோ­னியோ  குட்ரஸ் மற்றும்  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்லட்   ஆகியோர்  ஆரம்ப அமர்வில்  உரை­யாற்­றினர்.  

இந்த நிலை­யி­லேயே  இன்று  வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன இலங்­கையின்  சார்பில் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார்.  முக்­கி­ய­மாக தனது உரை­யின்­போது அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன புதிய அரசாங்கம் ஏன்  ஜெனிவா பிரேரணையின் இணை அனுசரணையிலிருந்து விலகுகிறது என்பதற்கான காரணத்தை விளக்கவிருக்கிறார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21