எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்

Published By: Digital Desk 3

25 Feb, 2020 | 05:24 PM
image

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91 ஆவது வயதில் கெய்ரோவிலுள்ள வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவர், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 850 பேரை, தனது பாதுகாப்பு படைகளை கொண்டு படுகொலைசெய்த குற்றத்திற்காக,  ஹொஸ்னி முபாரக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பின்னர் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு இராணுவ தடுப்பில் வைக்கப்பட்டார். 

மேலும் 80 வயதாகவும்  ஹொஸ்னி முபாரக் சுமார் 30 வருடகாலம் எகிப்தை ஆட்சி செய்துள்ளார். இந்நிலையில் அரபு வசந்த புரட்சியின் மூலம் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, படுகொலைகள் மற்றும் ஊழல் குற்றத்திற்காக ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்மார் என்போர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில் மகன்மார் இருவரும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்படவே, கெய்ரோவிலுள்ள இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முபாரக்,  நோய்வாய் பட்டநிலையில் மேன்முறையீடு செய்திருந்தார். 

குறித்த மனுவை விசாரித்து கெய்ரோ இராணுவ நீதிமன்றம்  ஹொஸ்னி முபாரக்கின் உடல்நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு, அவரை 2017 ஆம்  ஆண்டு விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17