ஊழல் ,மோசடி குற்றச்சாட்டற்றவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது மக்களின் பொறுப்பு : எஸ்.எம். மரிக்கார்

Published By: R. Kalaichelvan

25 Feb, 2020 | 04:19 PM
image

(ஆர்.விதுஷா)

ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு உள்ளடங்கலாக அனைத்து தரப்பிலும் குற்றச்சாட்டுக்களற்ற சிறந்த அரசில் வாதிகள் இருக்கின்றனர். அத்தகையோரை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது நாட்டு மக்களின் கடமையாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் வியத்மக அமைப்பிற்கிடையிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் மஹிந்த தரப்பினருக்கு மீண்டும் பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஜனாதிபதியால் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை சரிவர நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர்  மேலும்  கூறியதாவது , 

எயார் பஸ் கொள்வனவின் போது இடம் பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான தகவல்களை ஆதாரபூர்வமாக நாம்  வெளிப்படுத்தியிருந்தோம்.

இது தொடர்டபில் ஆராய்ந்து பார்க்கும் போது கடன்  அடிப்படையிலேயே கொள்வனவு இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே , ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாக நாட்டு மக்களுடைய பணமே அனாவசியமான முறையில் விரயமாக்கப்பட்டுள்ளது.

மத்தியவங்கி பிணை முறி கொள்வனவின்போது இடம் பெற்றதாக  கூறப்படும்  நிதி மோசடி தொடர்பில் தடயவியல் அறிக்கையின்  ஊடாக  பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மஹிந்த அரசாங்கத்தில் 10 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கும்  அதிகமான  நிதி  மோசடி இடம் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. ஊழியர்  சேமலாப நிதியே இவ்வாறாக அநாவசியமாக  பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆளும், எதிர்த்தரப்பு  உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்ட டீல் காரர்கள் உள்ளனர்.  ஆயினும் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் அவ்வாறான மோசடி க்காரர்கள் அல்ல . மாறாக மோசடி குற்றச்சாட்டுக்களற்ற    பாராளுன்ற உறுப்பினர்களும்  உள்ளனர் ஆகவே , நாட்டு மக்கள் தகுதியானவர்களை பாராளுமன்றத்திற்கு  அனுப்ப வேண்டியது  அவசியமானதாகும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55