காற்றின் தரம் குன்றிய நாடாக இந்தியா : உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

Published By: R. Kalaichelvan

25 Feb, 2020 | 04:20 PM
image

உலகின் மிக மோசமான காற்றின் தரம் குறைந்த நாடுகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில் இந்தியா மீண்டும் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் குறித்த அறிக்கையின் படி சீனா முன்னேற்றைத்தைக் கண்டுவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு அதிகளவில் காற்று மாசடையும் 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக  IQAir AirVisual இன் 2019 உலக காற்று தர அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் வட உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான புது டில்லியின் நகரமான காஜியாபாத் உலகின் மிக மோசமான காற்று மாசடைந்து வரும் நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை அப்பகுதியில் சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) 2019 இல் 110.2 ஆக தரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில காலமாக புது டில்லியில் சில பகுதிகளில் காற்றின்  AQI அளவு 800 தாண்டிய நிலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இது மிகவும் மோசமானதும் , அபாயகரமானது என அந்நாட்டின் சுகாதார அமைப்பினர் சுட்டிகாட்டினர்.

இந்நிலையில் தற்போது அதிகரித்திருக்கும் காற்றின் மாசானது முன்பை விட மூன்று மடங்கு அதிகமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வாறு ஏற்படும் காற்றின் மாசு தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவித்த உலக சுகாதார அமைப்பினர், இதில் ஏற்படும் தாக்கம் நுரையிரல் மற்றும் இருதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டிள்ளது.

அத்தோடு இதில் ஏற்படும் தூசு துணிக்கைள் 2.5 மைக்ரோ மீற்றருக்கும் குறைவான விட்டம் கொண்டவை, இவை இலகுவாக நுரையிரல் மற்றும் இருதயத்தை தாக்கக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக புற்று நோய்கள், சுவாச நோய்த்தொற்றுகள் என்பனவற்றில் சிக்கி இறப்பு வீதங்கள் அதிகரிக்கின்றதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி ஆண்டுக்கு 7 மில்லியன் பேர் காற்று மாசு தொடர்புடைய பிரச்சினைகளில் சிக்கி உயிரிழக்கின்றதாக தெரிவித்துள்ளது.

அத்தோடு உலக சுகாதார அமைப்பின் வலியுறுத்தலுக்கு அமைய செயற்பட மறுப்போர் காற்றின் மாசுகளில் சிக்கி நோய்வாய்ப்படுகின்றனர்.

அதேவேளை குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் அதிகளவில் ஏற்படுவதோடு , அவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த பிரச்சிணைகளில் இருந்து பாதுகாப்பாக செயற்படுதவற்கு மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டுமென அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image Help : CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52