மனித உரிமைகளை மேம்படுத்தல் குறித்து ஐ.நா.செயலரின் கூற்று வரவேற்கத்தக்கது-நஸிர் அஹமட்

Published By: Daya

25 Feb, 2020 | 03:31 PM
image

மனித உரிமை மீறல்களுக்குத் தேசிய இறைமை ஒரு போர்வையாக இருக்க முடியாது. மனித உரிமைகளை மேம்படுத்துதல் நாடுகளையும் சமூகங்களையும் வலுப்படுத்துகின்றது அதுவே இறைமையையும் வலுப்படுத்து கின்றது. என ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரனியோ கட்டரஸ், ஜெனிவாவில் தற்போது நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகுமெனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக மீண்டும் தெரிவாகியுள்ள ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

தேசிய இறைமை என்ற போர்வையின் கீழ் மனித உரிமை மீறல்கள் அவ்வப்போது உலக அரங்கில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதனை நமது நாட்டிலுள்ள இன வாத அமைப்புகளும் கையில் எடுத்துள்ளன. சிறுபான்மை சமூகங்களைத்திட்டமிட்ட முறையில் நசுக்கி ஒடுக்கவேண்டும் என்ற எண்ண வெளிப்பாடு உத்வேகம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஐ.நா.மன்றில் இந்த குரல் முன்வைக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியதாகும்.

அங்கு அவர் முன்வைத்துள்ள மற்றொரு கருத்தும் முக்கியத்துவம் பெறுகின்றது அதாவது, உலக அரங்கில் பதகளிப்புகளை தலைவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வெளியை அதிகரிப்பதன் மூலம் அனுகூலங்களைப்பெற முயற்சிக்கப்படுகின்றது. 

வக்கிரமான அரசியல் கணக்கீடு இறுகப் பற்றிப்பிடித்துள்ளது. வாக்குகளைப் பெருக்குவதற்காக மக்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளமை நமது நாட்டிலுள்ள சமகால அரசியல் நிலை மையைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்துள்ளது.

எனவே நம் நாட்டிலுள்ள சமகால அரசியல் தளத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் நாம், வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சூட்சுமங்களையும், காய்நகர்த்தல்களையும் தெளிவுபடத் தெரிந்துகொள்ளவேண்டும். 

அதிகாரம் நம்மிடம் உள்ளது எனவே நீங்கள் உங்களுக்குத் தேவையான உதவிகள்,  தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் எமக்கு வாக்களிப்பதே நல்லது என்ற கோதாவில் பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் தருணமாகச் சமகாலம் இருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. 

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் சிறுபான்மை கட்சிகளைப் பிரித்தாளும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் அறிகுறிகளும் தென்படுகின்றன. 

எனவே, இவ்விடயங்களில் நாம் அவதானமாக இருந்து எமது மனித உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதுடன் சமூகங்களின் இருப்பை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். அதற்கு நமக்கு பெரும் துணையாக இருப்பது நமது ஒற்றுமை என்பதை நினைவில் கொண்டு நாம் ஓரணியாகச் செயற்பட திடசங்கற்பம் கொள்ளவேண்டும் - என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53