2 இலட்சத்துக்கும் மேற்பட்டோ‍ரை பரிசோதனைக்குட்படுத்த தயாராகும் தென்கொரியா!

Published By: Vishnu

25 Feb, 2020 | 02:55 PM
image

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்ற நிலையில் தென்கொரியாவின் தேவாலயமொன்றில்  200,000 க்கும் மேற்பட்ட நபர்களை வைத்திய சோதனைக்குட்படுத்த தென்கொரியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு 2.5 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் அப்பால் கொரோனாவின் தாக்கம் ஐரோப்பா  மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வருவதை கருத்திற் கொண்டே இந்த நிதியுதவியை வழங்க முடிவெடுத்துள்ளது.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவின் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. 

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 80,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாடுகள் கொரோனவின் தாக்கமானது 2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸை விட 10 மடங்கிற்கும் அதிகமாகும் எனவும் கூறியுள்ளனர். 

சீனாவின் இறப்பு எண்ணிக்கையானது திங்கள்கிழமை முடிவில் 2,663 ஆக இருந்தது, முந்தைய நாளிலிருந்து 71 அதிகரித்துள்ளது. ஆனால், உலக சுகாதார நிறுவனம் (WHO) சீனாவில் தொற்றுநோய் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 2 வரை உச்சம் அடைந்தது என்றும், பின்னர் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளது.

இதேவேளை பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாக உலகளாவிய நாடுகளின் பொருளதாரமும் கொரோனாவின் தாக்கத்தினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றது. 

ஆகிய நாடுகளை பொருத்தவரையில் சீனாவுக்கு வெளியே அதிகளவானோர் தென்கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள 60 சதவீதமானவர்கள் ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுடன் தொடர்புகளை பேணியதாக நம்பப்படுகிறது. 

தேவாலயத்தில் 61 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையிலேயே இவ்வாறு குறித்த தேவாலய நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையோரையும் வைரஸ் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்படி தேவாலயத்தின் தலைவர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தென்கொரியர்களினதும் விபரங்களை வழங்குவதாக அரசாங்கத்திடம் உறுதியளித்துள்ளார். சமார் 215,000 பேரின் விபரங்கள் இதில் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இவர்களது பெயர் விபரங்கள் கிடைக்கப் பெற்றதும் அவர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனைக்குட்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்கொரியாவின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் கவலையைப் போக்கவும் அவர்கள் அனைவரையும் சோதனைக்குட்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவத்தின் கூட்டுப் பயிற்சி நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் தகவலை தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கியோங்-டூ நேற்றைய தினம் பென்டகனுக்கு விஜயம் மேற்கொண்ட போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo credit : RTE

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17