கன்னியா வெந்நீரூற்று விவகாரம் ; பௌத்த மதகுருவின் விண்ணப்பம் நிராகரிப்பு

Published By: Daya

25 Feb, 2020 | 03:40 PM
image

திருகோணமலை-கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இடைபுகு மனுதாரரின் விண்ணப்பம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய  தினம் (25) இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கன்னியா வெந்நீரூற்று வழக்கு இடைபுகு புது மனுதாரரை வழக்கில் ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதுபற்றியே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது. 

இவ்வழக்கில்  மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் மற்றும் முதலாம் இரண்டாம் மனுதாரர் சார்பில் அரச சட்டத்தரணி மற்றும் இடை புகு  மனுதாரர் சார்பில் அதாவது விகாரையின் விகாராதிபதி சார்பில் சட்டத்தரணி ஏ.எஸ்.எம்.ரபீஸ் உட்பட சிரேனிய புஞ்சிநிலமே ஆஜராகியிருந்தனர். 

குறித்த வழக்கில் இடைபுகு மனுதாரராக வில்கம் விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச தேரரினால்  முன் வைக்கப்பட்ட ஆவணங்களில் குறித்து கன்னியா வெந்நீரூற்று தொடர்பிலான எந்த ஒரு உரிமைக்கான ஆவணங்களையும் முன்வைக்காத படியினாலும், முதலாவது எதிர் மனுதாரரான தொல்பொருள் திணைக்களம் மற்றும் இரண்டாவது மனுதாரரான திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரினால்   கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்திற்கு உரிமையிருப்பதாகவோ  அல்லது இருப்பதாகவோ  அல்லது வில்கம் விகாரை விகாராதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது பற்றியோ எந்தவிதமான ஆவணங்களையும் முன்வைக்கவில்லை. 

எனவே குறித்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மனுதாரரைக் குறித்த வழக்கில் ஒரு கட்சிக் காரராக ஏற்றுக் கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம்  திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் தள்ளுபடி செய்து கட்டளை வழங்கப்பட்டது. 

குறித்த வழக்கானது எழுத்துமூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிக்கு அழைக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07