சவூதியிலிருந்து அமெரிக்காவுக்கு பயணித்த விமானத்தில் பெண் குழந்தைப் பிரசவம்

Published By: Raam

16 Jun, 2016 | 03:25 PM
image

சவூதி அரேபிய ஜெடாஹ் நகரிலிருந்து அமெரிக்க நியூயோர்க் நகரை நோக்கிச் சென்ற விமானமொன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த வேளை அந்த விமானத்தில் பயணம் செய்த நிறைமாதக் கரப்பிணிப் பெண்ணொருவர் குழந்தையொன்றைப் பிரசவித்ததால் அந்த விமானம் திசைமாற்றப்பட்டு ஹீத்ரோ விமான நிலையத்தில் அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது. 

நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. 

மேற்படி சவூதி அரேபிய எயார்லைன்ஸ் விமானம் வட அயர்லாந்துக்கு மேல் பறந்து கொண்டிருந்த வேளையிலேயே அந்தப் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். 

தொடர்ந்து ஹீத்ரோ விமான நிலையத்தில் அவசரகால நிலைமையின் கீழ் இறக்கப்பட்ட விமானத்திலிருந்த தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரதும் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52