நைஜீரியாவின் கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 7 இலங்கையர்கள்!

Published By: Vishnu

25 Feb, 2020 | 11:53 AM
image

இலங்கையைச் சேர்ந்த 7 பேர் நைஜீரியாவின் லாகோஸ் மாநிலத்தில் உள்ள பீக்ராஃப்ட் கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி அன்று நைஜீரிய கடற்படை, எம்டி ஜீப்ரூக் என்ற வெளிநாட்டு கப்பலை நைஜீரிய கடற்பரப்பில் தடுத்து நிறுத்தியது.

இதன்போது கப்பலில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 838 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயும் மீட்கப்பட்டது. இதன்போதே கப்பலில் பணியாற்றிய 7 இலங்கையர்களையும் நைஜீரிய கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன், அவர்களை பீக்ராஃப்ட் கடற்படை தளத்தில் தடுத்தும் வைத்துள்ளனர்.

இந்த கச்சா எண்ணெய் கடத்தல் தொடர்பில் நைஜீரிய கடற்படை வழக்குத் தொடர்ந்துள்ளதுடன், குறித்த வழக்கை நைஜீரியாவின் பொருளாதார மற்றும் நிதி குற்ற ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது.

இதனிடையே தாம் பயணித்த கப்பலில் சட்டவிரோதமான முறையில் கச்சா எண்ணெய் கடத்தப்படுவது என்பதை தாம் அறிந்திருக்கவில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறெனினும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் பெப்ரவரி 20 ஆம் திகதி சென்று பார்வையிட்டுள்ளனர்.

அது மாத்திரமின்றி அவர்களை விடுதலை செய்து விரைவாக இலங்கைக்கு அனுப்புமாறும் நைஜீரிய அதிகாரிகளடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் இந்த வழக்கை நைஜீரியாவின் பொருளாதார மற்றும் நிதி குற்ற ஆணையகம் பரிசீலித்து வருவதாகவும், அவர்கள் நிரபராதிகள் என்பது நிரூபிக்கப்படால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். 

குறித்த கப்பல் உரிமையாளரும் கப்பல் முகவரும் இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு முறையான சட்ட உதவிகளை மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52