இரண்டு முகம் காட்டும் ஆளும் ­த­ரப்பு

Published By: J.G.Stephan

25 Feb, 2020 | 11:42 AM
image

இன்னும், இரண்டு மாதங்­க­ளுக்குள் பொதுத்­தேர்தல் நடக்கப் போவது பெரும்­பாலும் உறு­தி­யாகி விட்ட நிலையில், அர­சியல் கூட்­ட­ணி­களை வலுப்­ப­டுத்திக் கொள்ளும் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கின்­றன.ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும், பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் இடையில் இருந்து வந்த இழு­ப­றிக்கு கடை­சியில் தீர்வு காணப்­பட்­டி­ருக்­கி­றது.ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான கூட்­டணி, அன்னம் சின்­னத்தில் போட்­டி­யிடும் முடிவை எடுத்­தி­ருக்­கி­றது. பொது­ஜன பெர­முன தனது மொட்டுச் சின்­னத்தை விட்டுக் கொடுக்­கா­மலும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திர பொது­ஜன கூட்­டணி என்ற பெயரை விட்டுக் கொடுக்­கா­மலும் ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­கின்­றது.

மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிட முடி­யாது என்று அடம் பிடித்துக் கொண்­டி­ருந்த- இணைத் தலைவர் பத­வியை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கொடுக்க வேண்டும் என்று விடாப்­பி­டி­யாக நின்ற- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஒரு வழி­யாக மொட்டு சின்­னத்தில் போட்­டி­யி­டவும், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கூட்­ட­ணியின் தவி­சாளர் பதவி போதும் என்­ற­ள­வுக்கும் இறங்கிப் போயி­ருக்­கி­றது.

சுதந்­திரக் கட்­சி­யுடன் கூட்­டணி தேவை­யில்லை என்றும், தனித்­த­னி­யாகப் போட்­டி­யி­டலாம் என்றும் கூறிக் கொண்­டி­ருந்த பொது­ஜன பெர­மு­னவும், கடைசி நேரத்தில், சுதந்­திரக் கட்­சி­யு­ட­னான கூட்டை உறுதி செய்­தி­ருக்­கி­றது. பொது­ஜன பெர­முன என்ற பெயரை விட்டுக் கொடுத்து, ஸ்ரீலங்கா சுதந்­திர பொது­ஜன கூட்­ட­ணியில் போட்­டி­யிட அது இணங்­கி­யி­ருக்­கி­றது.

தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், தமது எதிர்­பார்ப்பை நிறை­வேற்­ற­வில்லை என்ற விரக்தி மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­வதால் தான், இந்த இரண்டு கட்­சி­க­ளுமே விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கு இணங்­கி­யி­ருக்­கின்­றன என்ற விமர்­ச­னங்­களும் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.தனித்துப் போட்­டி­யி­டுவோம் என்று மல்லுக்கட்­டிய பொது­ஜன பெர­மு­னவும், மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிட இணங்க மாட்டோம் என்று வீறாப்புக் காட்­டிய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும், கடை­சியில் பெட்டிப் பாம்­பாக அடங்கிப் போயி­ருக்­கின்­றன.அது­மாத்­தி­ர­மன்றி, இந்த இரண்டு கட்­சி­களும் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள  புதிய கூட்­டணி, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் போட்­டி­யி­டாது என்றும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

ஸ்ரீலங்கா சுதந்­திர பொது­ஜன கூட்­டணி வடக்கு, கிழக்கில் போட்­டி­யி­டாது என்று தயா­சிறி ஜய­சே­கர முதலில் கூறி­யி­ருந்தார். அது குறித்து கூட்­டணிக் கட்­சி­களின் கூட்­டத்­திலும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த முடிவை இரண்டு பிர­தான கட்­சி­களும் எடுத்­துள்­ள­தற்கு முக்­கி­ய­மான காரணம், வடக்கு, கிழக்கில் மொட்டு சின்னம் இது­வரை செல்­வாக்கைப் பெற­வில்லை. மொட்டு சின்னம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் நடத்­தப்­பட்ட இரண்டு தேர்­தல்­க­ளிலும், வடக்கு, கிழக்கில் படு­தோல்வி காண நேரிட்­டது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஏனைய பிர­தே­சங்­களில் மொட்டு சின்னம் வெற்றி வாகை சூடிய போதும், வடக்கு, கிழக்கின் பெரும்­பா­லான பகு­தி­களில், அது படு­தோல்வி கண்­டி­ருந்­தது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிட்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவுக்கு வடக்கு, கிழக்கில் மிகக் குறைந்­த­ளவு வாக்­கு­களே கிடைத்­தி­ருந்­தன. மொட்டுச் சின்னம் சிறு­பான்­மை­யின மக்­களால் அச்­சத்­துடன் பார்க்­கப்­படும் ஒன்­றாக இருப்­பதே அதற்­கான முக்­கிய கார­ண­மாக கரு­தப்­ப­டு­கி­றது. தமிழ், முஸ்லிம் மக்கள் மொட்டு சின்­னத்­துக்கு வாக்­க­ளிக்கத் தயா­ராக இருக்­க­வில்லை. இந்­த­நிலை பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் தொடரக் கூடும் என்ற அச்சம் பிர­தான கட்­சி­க­ளிடம் இருக்­கின்­றன.ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எப்­ப­டி­யா­வது யாழ். மாவட்­டத்தில் ஒரு ஆச­னத்தை பெறலாம் என்று நம்­பு­கி­றது. மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிட்டால், அதுவும் கிடைக்­காமல் போய்­வி­டலாம் என்ற அச்சம் அத­னிடம் உள்­ளது.

அதே­வேளை, வடக்கு, கிழக்கில் தோல்­வி­ய­டைந்த மொட்டு சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஈ.பி.டி.பியும் தயா­ராக இல்லை. ஸ்ரீலங்கா சுதந்­திர பொது­ஜன கூட்­ட­ணியின் நிர்­வாக குழுவில் அதன் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டுள்ள போதும், ஈ.பி.டி.பி பொதுச்­செ­யலர் டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை ஏற்­க­னவே ஈ.பி.டி.பி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி கூட்­டி­லி­ருந்து வரு­கி­றது. அந்தக் கட்சி கூட, கடந்த தேர்­தல்­களில் தனித்தே வீணை சின்­னத்தில் போட்­டி­யிட்டு வரு­கி­றது.வீணை சின்­னத்தில் ஒரு ஆச­னத்தைக் கைப்­பற்றக் கூடிய நிலையில் உள்ள ஈ.பி.டி.பி, மொட்டு சின்­னத்­திலோ, வெற்­றிலைச் சின்­னத்­திலோ கள­மி­றங்கத் தயா­ராக இல்லை. அது­போலத் தான், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும், மொட்டு சின்­னத்தில் வடக்கு, கிழக்கில் கள­மி­றங்க விரும்­ப­வில்லை.

பொது­ஜன பெர­மு­னவைப் பொறுத்­த­வ­ரையில், மொட்டுச் சின்னம் அதற்கு முக்­கி­ய­மா­ன­தென்­றாலும், வடக்கு, கிழக்கில் அந்தச் சின்­னத்தை மீண்டும் ஒரு­முறை பரி­சோ­த­னைக்கு எடுத்துக் கொள்ள தயங்­கு­கி­றது போலத் தெரி­கி­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் மொட்டுச் சின்னம் தமிழ், முஸ்லிம் மக்­களால் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­பட்­டது. அது­போன்ற நிலை, மீண்டும் பொதுத் தேர்­தலில் ஏற்­பட்டு விடக்­கூ­டாது என்­பது பொது­ஜன பெர­மு­னவின் கவ­லை­யாக இருக்­கலாம். மீண்டும் மொட்டுச் சின்னம் தமிழ், முஸ்லிம் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்டால், சர்­வ­தேச அளவில் அர­சாங்­கத்தின் அங்­கீ­கா­ரத்­துக்கு சவா­லாக இருக்கும். அதனால் கூட மொட்டுச் சின்­னத்தை தவிர்க்கும் முடிவை அர­சாங்க உயர் மட்­டங்கள் எடுத்­தி­ருக்­கலாம்.

அதே­வேளை, வெற்­றிலைச் சின்­னத்தில் இந்தக் கூட்­டணி தனி­யாக கள­மி­றங்­கி­னாலும் கூட, இரண்டு பிர­தான கட்­சி­களின் செல்வாக்கு கேள்விக்குள்ளாக நேரிடும். வடக்கு, கிழக்கில் ஒரு முகத்தையும், தெற்கில் மற்றொரு முகத்தையும் காட்டுகின்ற நிலையில் தான் ஆளும்தரப்பு உள்ளது என்ற விமர்சனங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். அரசாங்கம் தனது சுயமுகத்துடன் வடக்கு, கிழக்கிற்கு செல்ல முடியாமல் இருக்கிறது என்பது உறுதியாகும். வடக்கு, கிழக்கில் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பு வெற்றியைப் பெறுகிறதோ இல்லையோ, என்பது முக்கியமல்ல. அது எந்த வடிவத்தில் போட்டியிடப் போகிறது என்பதைக் கொண்டே, ஆளும்கட்சியின் உண்மையான நிலை வெளிப்பட்டு விடும்.

-சத்ரியன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04