கொவிட்-19 வைரஸ் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இலங்கை வெற்றி - வைத்தியர் குருகே

Published By: Digital Desk 3

25 Feb, 2020 | 12:51 PM
image

கொவிட் -19 கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இலங்கை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. 

மருத்துவ கவனிப்பின் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளதாக அரசாங்க தொற்றுநோயியல் பிரிவின் (GEU) தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித குருகே நேற்று தெரிவித்துள்ளார்.

சாத்தியமான கொவிட் -19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரில், ஒரு வெளிநாட்டவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் கண்காணிப்பில் இருந்த அதேவேளை,  மற்றொரு இலங்கையரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றையவர் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று டாக்டர் குருகே மேலும் தெரிவித்தார்.

"நாம் மனநிறைவுடன் இருக்க முடியாது, ஏனென்றால் முழுமையாக குணமடைந்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய சீனப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று எதுவும் இல்லை, ஆனால் தென் கொரியாவிலும் இத்தாலியிலும் இலங்கையர்கள் பெரியளவில் வாழும் நாடுகளிலும் பலர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும்  கொழும்பு துறைமுக ஆகியவற்றில் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளோம்.

கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருபவர்கள் அனைவரும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு  அவர்கள் ஸ்கானிங் முறை மூலம் பரிசோதிக்கப்படுவார்கள்  என்று வைத்தியர் குருகே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சீனாவில் கொரோனா வைரஸ் அல்லது கொவிட் -19 இன் தாக்கத்தினால் இதுவரை 2,698 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,000 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவில் 890 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில்,கொரோனா வைரஸினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளதோடு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சுமார் 60 பேர் வரை கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் குவைத்  மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தாக்கிய முதலாவது நோயாளி பாதிவாகியுள்ளதை உறுதிசெய்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22