தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது - சிறீதரன்

Published By: Daya

25 Feb, 2020 | 10:10 AM
image

தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தைச் சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாம் இந்த நாட்டிலே விடுதலை வேண்டி 70ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறோம் ஆரம்பத்தில் தந்தை செல்வா தலைமையில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியில் தலைவர் பிரபாகரன் தலைமையிலும் போராடி வந்தவர்கள் தமிழர்கள்.

தமிழர்கள் சிங்கள மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக இந்த மண்ணில் போராடவில்லை. நாம் பூர்விகமாக வாழ்ந்த இந்த மண்ணிலே எமது உரிமைகளைப் பெறுவதற்காகவே நாம் போராடி வந்திருக்கிறோம் போராடியும் வருகிறோம். 

இவ்வாறாக நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் தேசிய விடுதலை போராட்டத்தைச் சிதைக்க இந்த அரசு உத்வேகத்துடன் செயற்படுகிறது. வடக்கு கிழக்கு பூராகவும் இராணுவ சோதனை நிலையங் களை நிறுவிச் சோதனையிட்டு தமிழர்களைத் தொடர்ந்தும் ஒரு இராணுவ கெடுபிடிக்குள் வைத்திருக் கவே இந்த அரசு செயற்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11