தென்­னா­பி­ரிக்கா மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­வரும் நான்­கா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் போட்­டியில் தென்­னா­பி­ரிக்க அணிக்கு 481 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காக நிர்­ண­யித்­துள்­ளது இந்­தியா.

இந்த டெஸ்ட் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இந்­திய அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது. அதன்­படி முதல் இன்­னிங்ஸில் இந்­தியா 334 ஓட்­டங்­களைப் பெற்­றது. தனது முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த தென்­னா­பி­ரிக்க அணி 121 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

அதன்­பி­றகு தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த இந்­திய அணி 267 ஓட்­டங்­களைப் பெற்று 5 விக்­கெட்­டுக்­களை இழந்­தி­ருந்த வேளையில் டிக்­ளேயர் செய்­தது.

அப்­போது தென்­னா­பி­ரிக்க அணிக்கு 481 ஓட்­டங்கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. நான்­கா­வது நாளான நேற்று ஆட்ட நேர முடி­வின்­போது தென்­னா­பி­ரிக்க அணி 2 விக்­கெட்­டுக்­களை இழந்து 72 ஓட்­டங்­களைப் பெற்­றுள்­ளது. களத்தில் அம்லா 207 பந்­து­க­ளுக்கு முகம்­கொ­டுத்து 23 ஓட்­டங்­க­ளு­டனும் மறு­மு­னையில் டிவி­லியர்ஸ் 91 பந்துகளுக்கு 11 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர். இன்று போட்டியின் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.