ஜெனிவா விவகாரத்தை கொண்டு ஆளும், எதிர் தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றார்கள் : புபுது ஜயகொட 

Published By: R. Kalaichelvan

24 Feb, 2020 | 09:32 PM
image

(ஆர்.விதுஷா)

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள  போதிலும்  அதன் ஊடாக  எவ்வித  முன்னேற்றகரமான  நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்படவில்லை. இவ்விடயத்தை  காரணம் காட்டியே ஜெனிவா மனித  உரிமை பேரவை உட்பட, ஆளும் மற்றும் எதிர் தரப்பினர்கள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றார்கள். என முன்னிலை சோசலிச கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது  புபுது ஜயகொட தெரிவித்தார்.

 ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டுமக்களுக்களித்த வாக்குறுதிகளிலிருந்து விலகி  செயற்படுகின்றது.  ஆகவே பொதுத்தேர்தலின் போது  நாட்டுமக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். என முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி  விவகார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். 

பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிச  கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் , 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்று நிறைவேற்றப்படவில்லை.

மாறாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. வைத்தியசாலைகளில் அத்தியாவசிய  மருந்துப்பொருட்களுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

மஹரகம புற்றுநோய் வைத்திய சாலையில் 11 அத்தியாவசிய  மருந்துப்பொருட்களுக்கு  தட்டுப்பாடு நிலவுகின்றது. அதேவேளை   நாட்டில் உரத்தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை கட்டுப்படுத்த  அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. 

 அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து  15ஆயிரத்திற்கும் அதிகமானோர் அரச பணிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஏகாதிபதிய  ஆட்சியை இல்லாதொழிப்பதாக கூறிக்கொண்டே இந்த அரசாங்கம்  கூறிக்கொண்டது.  ஆயினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மாறுபட்ட வித்தில் அமைந்துள்ளன. 

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட  இரண்டு தீர்மானங்களிலிருந்தும் விலகுவதற்கு இந்த அரசாங்கம் தீர்மானம்  எடுத்துள்ளது.

அந்த 30/1 என்ற தீர்மானத்தில் மிக முக்கியமாக யுத்தத்தின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும்  மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக விரிவான சுயாதீன  விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அந்த விசாரணைப்பொறிமுறையில் பொதுநலவாய நாடு நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள்  ஈடுபடுத்தப்படவேண்டும். என்ற பரிந்துரைகளும்  இடம் பெற்றிருந்தன. 

சர்வதேச நாடுகள் யுத்த அனுகுமுறைகள் தொடர்பில்   விதிமுறையுண்டு.

அதனை மீறி இலங்கைய செயற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிக்னது. ஆகவே ,இதன் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்படவேண்டும்.  இந்த விடயம் தொடர்பில் அனைத்து உலக நாடுகளுமே பொறுப்புக்கூற வேண்டும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02