கூட்டமைப்பும், கூட்டணியும் நட்பு கட்சிகள் என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும் - வேலுகுமார்  

Published By: Digital Desk 4

24 Feb, 2020 | 08:26 PM
image

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் பகைமை கட்சிகள் அல்ல. இரண்டும் நட்பு கட்சிகள். எங்களுக்கு இடையில் இருக்கக்கூடிய ஒருசில முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள். அவை பகைமை முரண்பாடுகள் அல்ல. 

எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேருதல் என்பது நல்ல ஒரு கனவு. ஆனால், நடைமுறை சிக்கல்கள், வடக்கு-தெற்கு அரசியல் கள நிலவரங்கள், அரசு-எதிரணி முரண்பாடுகள் காரணமாக எல்லா தமிழ் கட்சிகளும் ஒரே அணியாக ஒன்று சேர முடியாது. ஆகையால் எங்கெங்கே ஒருமித்து செயற்பட முடியுமோ, அங்கெல்லாம் நாம் ஒருமித்து செயற்படலாம். கூட்டமைப்புக்குள் மூன்று கட்சிகளும், கூட்டணிக்குள் மூன்று கட்சிகளும் உள்ளன.

 இந்நிலையில் நாம் ஒன்று சேர்ந்து செயற்பட்டால், பிரதான ஆறு தமிழ் கட்சிகள் இயன்ற மட்டங்களில் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றன என்று அர்த்தமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி பிரதி தலைவர் கண்டி மாவட்ட எம்பி வேலுகுமார் கூறியுள்ளார்.                 

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானத்தின்படி வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் போட்டியிடுவதானால், அது தொடர்பில் எமது ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் பேசி தீர்மானிப்போம் என கூட்டமைப்பின் பேச்சாளரும், தமிழரசு கட்சியின் பிரமுகருமான சுமந்திரன் எம்பி கூறியுள்ளமை தொடர்பில் மேலும் வேலுகுமார் எம்பி கூறியுள்ளதாவது,

வடக்கு கிழக்கு மாகாணங்களின் சில மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் நாமும் ஆலோசித்து வருகிறோம். அதேபோல் கூட்டமைப்பும் சில தென்னிலங்கை மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிக்கிறது. இந்த பரஸ்பர போட்டி, தமிழ் வாக்குகளை சிதைத்து விடக்கூடாது என்பதில் இரு சாராரும் கவனமாக இருக்கின்றோம்.

எனவே எந்த அடிப்படையில் நாம் புரிந்துணர்வுடன் செயற்படுவது என நமது இரண்டு அணிகள் மத்தியில் பேச்சுகள் இடம்பெறலாம். இது தொடர்பில்  கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்பி, எமது தலைவர் மனோ கணேசனுடன் தொடர்புகொண்டுள்ளார். இன்னமும் சில தினங்களில் இந்த பேச்சுகள் இடம்பெறலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01