கொழும்பு, கம்பஹாவில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு ஏப்ரல் இறுதிக்குள் தீர்வு!

Published By: Vishnu

24 Feb, 2020 | 08:06 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு ஏப்ரல் இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகின்றது. தற்போதுள்ள உஷ்ணமான காலநிலையில் அந்த பிரச்சினை மிகவும் தீவிரமாக உணரப்படுகின்றது. அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்றதுடன் நீர் பாவனையும் அதிகரித்திருக்கின்றது. அதனால் நீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கமுடியாது.

அத்துடன் நீர் பாவனை அதிகரிக்கும்போது விநியோகிக்கப்படும் நீரின் அழுத்தம் குறைவடைகின்றது. அதனால் மேல் நில பிரதேசங்களுக்கு நீர் அழுத்தம் குறைந்தே செல்கின்றது. இந்த பிரச்சினை பல பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அதனால் நீர் பாவனையாளர்கள் நீர்,வீண்விரயமாகாதவகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04