தொண்டையில் பால் சிக்கியமையினால் 1 1/2 மாத பெண் சிசுவொன்று நேற்றிரவு பரிதமாக உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் அலாவத-கரவிடாகாரய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

குறித்த சிசு அருந்திய பால் தொண்டையில் அடைத்ததால் மூச்சுத் திணரல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் பதற்றமடைந்த குறித்த சிசுவின் பெற்றோர் சிசுவை அலாவத வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்பே குறித்த சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் செனாலி சௌபாக்யா என்னும் பெண் சிசுவே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.