கதிர்காமத்திலிருந்து திஸ்ஸமஹாராம பகுதிக்கு வேகமாக சென்ற வேன் ஒன்று ஜுல்பல்லம பகுதியில் வைத்து வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது மோதியதால் பெண் பலியாகியுள்ளார்.  

திஸ்ஸமஹாராம, ஜுல்பல்லம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெயந்தி மஹேசிக்கா என்ற யுவதி, தனது கையடக்கத் தொலைபேசிக்கு மீள்நிரப்பு அட்டையை பெற்று கொள்வதற்காக வீட்டிலிருந்து பிரதான வீதிக்கு சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலநறுவை பகுதியைச் சேர்ந்த சிலர் யாத்திரைக்காக கதிர்காமத்திற்கு  சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்தவர்களில் இரண்டு பெண்கள் உட்பட 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளதோடு அவர்கள் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.