இலங்­கையில் பாலியல் இலஞ்சம் – ஓர்  ஆய்வு

24 Feb, 2020 | 04:43 PM
image

சமத்­துவம் மற்றும் நீதிக்­கான நிலை­யத்தின் ஸ்தாப­கரும் நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ரு­மான ஷியா­மளா கோமஸ் மற்றும் இலங்­கையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் எதிர்­நோக்கும் பாலியல் இலஞ்சம் தொடர்பில் செய­லாற்றும் சிரேஷ்ட செயற்றிட்­ட ­ஒருங்­கி­ணைப்­பாளர் அன்டோ அந்­தப்பன் ஆகியோர் இலங்­கையில் பாலியல் இலஞ்சம் பற்­றிய ஆய்­வு­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இது தொடர்பில் தாம் திரட்­டிய தக­வல்­களின் அடிப்­ப­டையில் அவர்கள் வழங்­கிய நேர்­காணல் இங்கு தரப்­ப­டு­கின்­றது.

கேள்வி: பாலியல் இலஞ்சம் (Sexual Bribery) என்­பதன் அர்த்தம் என்ன?

பதில்: நபர் ஒருவர் பொதுத் துறை அதி­காரி, நீதித்­துறை அதி­காரி, சமாதான நீதிவான், பொலிஸ் அதி­காரி (1965ஆம் ஆண்டின் இலஞ்ச ஒழிப்பு சட்ட இல 2இன் கீழ் உள்­வாங்­கப்­பட்­ட­வர்கள்) போன்­ற­வர்­க­ளிடம் சட்­டப்­பூர்வ­மாக பெற்றுக் கொள்­ள­வேண்­டிய சேவையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு, ஒரு பாலியல் சலு­கையை (sexual favors) கோரும் செயல் பாலியல் இலஞ்சம் என்று அழைக்­கப்­ப­டு­கி­றது.

இது முன்னர் பெரு­ம­ளவில் அறிந்­தி­ராத ஒரு சொற்­ப­த­மாகும். வட மாகாணத்தை சேர்ந்த பெண்கள் பொதுச் சேவை­களை பொதுத் துறை அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து பெற்றுக் கொள்ள முயற்சி செய்யும் போது, அவர்­க­ளி­ட­மி­ருந்து குறித்த அதி­கா­ரிகள் பாலியல் ரீதி­யான சலு­கை­களை  கோரு­கின்­றமை தொடர்பில் பெண் செயற்­பாட்­டாளர் ஒரு­வ­ருடன் நாம் தொடர்பு கொண்ட போது அறிந்து கொள்ள முடிந்­தது.

உதா­ர­ண­மாக படை­யினர், பொலிஸார், பொது சுகா­தா­ரப்­ ப­ரி­சோ­த­கர்கள் மற்­றும் ­காதி நீதி­ப­திகள் இந்த சொற்­ப­தத்­தி­னை நாம் மோசடி தவிர்ப்பு கட்­ட­மைப்பு மற்றும் குற்­றச்­செ­யல்­களில் (Anti corruption framework and as a criminal offence) ஒன்­றாக உள்­வாங்கும் வகையில் பிரே­ரித்­தி­ருந்தோம்.

கேள்வி: எக்­கா­லப்­ப­கு­தியில் இந்த விடயம் உங்கள் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­பட்­டி­ருந்­தது?

பதில்: 2015 ஆம் ஆண்டு. எவ்­வா­றா­யினும், 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்த விடயம் தொடர்பில் நாம் கூடு­த­லா­க­க­வனம் செலுத்த தொடங்­கி­ய­துடன், இது தொடர்­பான சம்­ப­வங்­களை ஆவ­ணப்­ப­டுத்த ஆரம்­பித்தோம்.

கேள்வி: உங்கள் ஆய்வின் போது, இலங்­கையில் நிலவும் இந்தப் பிரச்­சினை ஏனைய ஆசிய நாடு­க­ளிலும் காணப்­பட்டதை கண்­ட­றிந்­தீர்­களா?

பதில்: ஆம். உதா­ர­ண­மாக இந்­தி­யாவை எடுத்துக் கொண்டால், இந்த விடயம் தொடர்பில் விசே­ட­மாக கவனம் செலுத்­தப்­ப­டாத போதிலும், 2018ஆம் ஆண்டின் மோசடி தவிர்ப்பு (திருத்தம்) சட்­டத்தின் கீழ் பாலியல் சலு­கைகள் அடங்­க­லாக பாலியல் குற்றச் செயல்­களில் கவனம் செலுத்­தப்­பட்­டி­ருந்­தது. கடந்த ஆண்டில் “தகா­த­முறை அனு­கூலம்”  (undue advantage) எனும் தலைப்பில் இந்­தி­யாவின் சட்­டத்தில் மற்­று­மொரு திருத்தம் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­தி­யாவின் சட்­டத்தில் இந்த விட­யங்கள் குறித்த திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­மை­யா­னது இந்த பிரச்­சினை இந்­தி­யா­விலும் காணப்­ப­டு­கின்­றது என்­பதை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. இலங்­கையில், போதி­ய­ளவு விழிப்­பு­ணர்வு இன்மை என்­ப­தனால், இந்த தோற்­றப்­பாடு நிகழ­வில்லை என கரு­தக்­கூ­டாது. யுத்தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பெண்­களை இலக்­காகக் கொண்டு இடம்­பெறும் பாலியல் இலஞ்சம் தொடர்பில் எமது ஆய்­வுகள் கவனம் செலுத்­தி­யி­ருந்­தன. எவ்­வா­றா­யினும், நாட்டின் ஏனைய பாகங்­களைச் சேர்ந்த பெண்­க­ளுக்கு இந்த நிலை ஏற்­ப­டு­வ­தில்லை எனக் குறிப்­பிட முடி­யாது. பொதுச் சேவை ஒன்றை எதிர்­பார்க்கும் பெண் ஒருவர் தமக்கு தேவைப்­படும் சேவையை பெற்றுக் கொள்­வ­தற்கு பிர­தி­யீ­டாக பாலியல் உப­கா­ரத்தை வழங்க வேண்­டிய ஒரு நிலையை எதிர்­கொள்­கின்றார்.

கேள்வி: தனியார் நிறு­வ­னங்­க­ளுக்குள்  பாலியல் இலஞ்சம் பெறு­வது இடம்­பெ­று­கின்­றதா?

பதில்: ஆம் தனியார் துறையைச் சேர்ந்த நிறு­வ­னங்­களின் அதி­கா­ரிகள் நுண் நிதிச் சேவை­களை வழங்கும் சில சந்­தர்ப்­பங்­களில் பாலியல் உப­கா­ரத்தை கோரி­யி­ருந்­தமை தொடர்­பான சில சம்­ப­வங்கள் பற்றி நாம் அறிந்தோம்.

கேள்வி: பாலியல் இலஞ்சம் தொடர்பில் எந்­த­ளவு விழிப்­பு­ணர்வு காணப்­ப­டு­கின்­றது?

பதில்: இது ஓர் பரிச்­ச­ய­மற்ற தலைப்பு என்­பதால் ஒரு சில நிறு­வ­னங்­க­ளினால் மாத்­திரம் இந்த விடயம் பேசப்­பட்­டி­ருக்கும். மேலும், பாலியல் இலஞ்சம் காணப்­படும் நிலையில், அது பாலியல் இலஞ்சம் என்­ப­தாக விவ­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­தாக எமது ஆய்வு அமைந்­தி­ருந்­தது. இதை நாம் முதன் முதலில் அறி­முகம் செய்­தி­ருந்த போது, பெண்­களும் கிரா­ம­மட்­டத்தில் அவர்­க­ளுக்கு உதவும் செயற்­பாட்­டா­ளர்­களும் சற்று குழப்­ப­ம­டைந்­தி­ருந்­தனர். இதன் கார­ண­மாக, வீடு­களில் இடம்­பெறும் வன்­மு­றைகள், சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் பாலின அடிப்­ப­டையில் இடம்­பெறும் இதர வன்­மு­றை­க­ளி­லி­ருந்து வேறு­படுத்த சிர­ம­மாக இருந்­தது. தற்­போது நாம் இந்த விடயம் தொடர்பில் செய­லாற்ற ஆரம்­பித்து சுமார் 5 வரு­டங்கள் கழிந்­துள்ள நிலையில், சிவில் சமூக நிறு­வ­னங்கள் மற்றும் சமூ­கத்தின் பெண்கள் மத்­தியில் இந்த விடயம் தொடர்­பான புரிந்­து­ணர்வு மற்றும் கவனம் செலுத்­து­வது என்­பது மிகவும் குறை­வா­ன­தா­கவே அமைந்­துள்­ளது.

 கேள்வி: பாதிக்­கப்­ப­டு­பவர் குறித்த நடவ­டிக்­கையில் ஏற்­க­னவே ஈடு­பட்­டுள்ள நிலையில், தாம் எதிர்­நோக்­கி­யுள்ள நிலை தொடர்பில் அவர் உணர்­வது கடி­ன­மா னதா?

பதில்: எமது செயற்­பா­டு­களின் போது, யுத்தம் மற்றும் வறு­மையால் பாதிக்­கப்­பட்ட பெண்­களை நாம் சந்­தித்­தி­ருந்தோம். இவர்கள் நகர்ப் பகு­தி­களை சேர்ந்­த­வர்­களை போலன்றி, அவர்­களின் சொந்த நிலை மற்றும் சூழல் அல்­லது மூடிய சூழலில் வளர்க்­கப்­பட்­டி­ருந்­தமை கார­ண­மாக இவ்­வா­றான கோரல்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கத்­ த­வ­று­ப­வர்­க­ளாக அமைந்­தி­ருந்­தனர். அவ்­வா­றான சூழ்­நி­லை­களை எதிர்­கொண்­ட­மையால், சிலர் வெட்­கத்­து­டனும் தடு­மாற்­றத்­து­டனும் காணப்­பட்­டதால், தம்மை தவிர்த்த வண்­ணமும் தமக்கு தேவை­யான பொதுச்­சே­வை­களை பெற்றுக் கொள்­வ­தி­லி­ருந்து தம்மை விலக்­கியும் வைத்­துள்­ளனர். ஒரு சம்­ப­வத்தில், தமது தேவையை நிறை­வேற்றிக் கொள்ள அரச அதி­காரி ஒரு­வரை நாடிய பெண்ணின் வீட்­டுக்கு குறித்த அரச அதி­காரி அடிக்­கடி விஜயம் செய்து, அந்த பெண்ணின் நம்­பிக்­கையை வென்­ற­வ­ராக அமைந்­தி­ருந்தார். பெரும்­பா­லான பெண்­க­ளுக்கு இவ்­வாறு ஏற்­படும் நம்­பிக்கை கார­ண­மாக குழப்­ப­நிலை ஏற்­ப­டு­கின்­றது.குறித்த நபர் பாதிக்­கப்­ப­டு­ப­வரின் அதே சமூ­கத்­தி­லி­ருந்து அல்­லது அவ்­வா­றான பின்­பு­லத்தைக் கொண்­ட­வ­ராக இருந்தால் இந்த குழப்­ப­நிலை மேலும் அதி­க­மாக காணப்­படும்.

கேள்வி: இந்த நிலைக்கு இல­குவில் முகங்­கொ­டுக்­கக்­கூ­டி­ய­வர்கள் யார்?

பதில்: கண­வ­ரை ­பி­ரிந்து, தனி­மையில் அல்­லது ஆண் துணை­யின்றி வாழும் பெண்கள்  மற்றும் அவர்­களின்  தலை­மையில் இயங்கும் குடும்­பங்­களின் பெண்கள் அதி­க­ளவு பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். குற்­ற­மி­ழைப்­பவர் பெரும்­பாலும் இந்த நிலைமை தொடர்பில் அறிந்­தி­ருப்பார்.  

கேள்வி: பாலியல் இலஞ்சம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு தற்­போது அமு­லிலுள்ள சட்டம் மற்றும் கொள்கை கட்­ட­மைப்­புகள் யாவை?

பதில்: இலஞ்ச ஒழிப்பு சட்­டத்தில் (1965ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கம்) இலஞ்சம் தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இலஞ்­சத்தின் ஒரு வடி­வ­மாக பாலியல் திருப்தி (sexual gratification) என்­பது இதில் உள்ளடங்­கி­யுள்ள போதிலும், பாலியல் இலஞ்சம் பற்­றிய குறிப்­பான விளக்­கங்கள் எதுவும் இதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. எனவே, பாலியல் ரீதி­யான சலு­கைகள் எவையும் பாலியல் திருப்­தி­யுடன் இணைக்­கப்­ப­ட­வில்லை. இலங்கை ஜன­நா­ய­க ­கு­டி­ய­ரசு எதிர் அப்துல் ரசாக் குதுப்தீன் என்ற முக்­கி­யத்­துவம் வாய்ந்த வழக்கில், இலஞ்ச ஒழிப்பு சட்­டத்தில் பாலியல் திருப்­தி­யுடன் தொடர்புடைய இலஞ்சமும் உள்ளடங்கியுள்ளமை பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், பாலியல் இலஞ்சத்தை சட்டத்தில் உள்ளடக்குவதற்கு வழியேற்பட்டிருக்கிறது.ஆனாலும் இது சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் எமது ஈடுபாட்டின் காரணமாக, பாலியல் இலஞ்சம் தொடர்பான விடயங்களை அடக்கிய திருத்தங்கள் இலஞ்ச ஒழிப்பு சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அது போதாது. சட்டம் திருத்தப்பட வேண்டும். உதாரணமாக, இலஞ்சம் வழங்கியமைக்காக பெண் தண்டிக்கப்படக்கூடாது.  

கேள்வி: தற்போது பின்பற்றப்படும் செயன்முறை யாது?

பதில்: அரசியலமைப்பின் 11ஆம் உறுப்புரையின் பிரகாரம் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாட்டை அல்லது பொதுச் சேவை ஆணைக்குழுவில் அல்லது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்ட நபரைப் பொறுத்து பரிகாரங்கள் அல்லது தண்டனைகள் வேறுபடும்.

சி.சி.என்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13