வாரத்தில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை ; மனம் நோகும் மலையக இளைஞர்கள்

24 Feb, 2020 | 04:26 PM
image

இலங்கையின் பல  மாவட்டங்களில் இன்று  தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என பல தரப்பினரும் புடவை, நகை, பலசரக்கு போன்ற வர்த்தக நிலையங்களை நடத்தி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலும் மலையக இளைஞர்களே வேலை செய்கின்றனர்.

குறித்த வர்த்தக நிலையங்கள் பெரும்பாலானவற்றில் சாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. சாப்புச் சட்டம் என்றால் என்ன என்பதை அறியாமலேயே பலர் வர்த்தக நிலையங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். வாரத்தில் ஒரு நாளாவது வர்த்தக நிலைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்பதைச் சாப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.

இது குறித்து அரசாங்கமும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.

பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் வாரத்தில் ஒருநாளாவது, அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை. அரச, வர்த்தக விடுமுறை தினங்களில் கூட இவர்களுக்கு விடுப்பு இல்லை. ஏன், கடந்த சுதந்திர தினத்தன்று கூட, சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஊழியர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டிருந்தது. உண்மையில் இது மனிதாபிமானமற்ற ஒரு செயலாகவே தோன்றுகின்றது.

வாரத்தில் ஒருநாளேனும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்பதே பலரதும் கோரிக்கையாக இருக்கின்றது. இலாபம் ஈட்டுவது  மட்டும் முதலாளிமார்களின் நோக்கமாக இருந்துவிடக்கூடாது.  அந்த இலாபத்தை ஈட்டித்தருவதற்காக மனந்தளராமல் உழைக்கும் ஊழியர்களையும் சற்று நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்க வேண்டும். தமது ஊழியர்களின் நலன்களில் அக்கறைகாட்டவும் வேண்டும்.  அது மட்டுமன்றி, அவர்களது உரிமைகளைத்  தட்டிப் பறிக்காதிருக்கவும் வேண்டுமென கோரப்படுகிறது.

ஒருநாளாவது விடுமுறை வழங்கப்பட்டால், அவர்கள் தமது தனிப்பட்ட, சொந்த தேவைகளை கவனிக்கலாமல்லவா? இது ஏன் முதலாளி வர்க்கத்தினருக்குப் புரிவதில்லை? தமது வர்த்தக நிலையத்தை ஒரு நாள் மூடுவதால் நட்டம் ஏற்படும் என்று அதன் உரிமையாளர்கள் நினைத்தால், ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தினங்களில் மாறிமாறி விடுமுறை தரலாம். இதன்மூலம் அவர்கள் தமது சொந்த தேவைகளை முடித்துக் கொள்ள வழியேற்படும். ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். இல்லையேல் அவர்களுக்கு வாழ்க்கையில் விரக்திதான் ஏற்படும்.  

இதுகுறித்து வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சற்று சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

சில விற்பனை நிலையங்களில்  ஞாயிற்றுக்கிழமை அரைநாள் விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அதுவும் பிற்பகல் 3.00 மணிவரை வேலை செய்தாக வேண்டும். தூர இடங்களுக்குச் சென்று பணியாற்றும் ஊழியர்கள், தம் வீடுபோய் சேர மணிக்கணக்காகலாம்.  இதனால் பகல் உணவைக் கூட இவர்கள் 4.00, 5.00 மணிக்கே உண்ண வேண்டியிருக்கிறது. அரைநாள் என்றால் சரியாக  1.00 மணி அல்லது 2.00 மணிக்கு வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டும். இல்லையேல் அரைநாள் விடுப்பு என்பது அர்த்தமற்றதாகிவிடும்.

உணவகங்கள், மருந்துக் கடைகள், சிகை அலங்கார நிலையங்கள் தவிர்ந்த பெரும்பாலான  வர்த்தக நிலையங்கள் இதனைப் பின்பற்றலாம்.

சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் இதுகுறித்து ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும். ஒரு சில உள்ளூராட்சி சபைகளினால் சில பிரதேசங்களில் சாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேவேளை பிரதேசங்களையோ நகரங்களையோ பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக சங்கங்கள் இது குறித்து அக்கறை எடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது குறித்த மலையக இளைஞர்களுக்கு விடியல்  பிறக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

– லேகா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22