வருமான வீழ்ச்சியும் வறுமையின் எழுச்சியும் !

Published By: J.G.Stephan

24 Feb, 2020 | 04:25 PM
image

எதிர்­வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பளம் நிச்­சயம் வழங்­கப்­படும் என்று இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ர ஸின் தலை­வரும் சமூக வலு­வூட்டல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு வச­திகள் அபி­ வி­ருத்தி அமைச்­ச­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் தெரிவித்திருக்­கின்றார். எனினும் கம்­ப­னி­களின் இழு­ப­றிக்கு மத்­தியில் இது எந்­த­ள­வுக்குச் சாத்­தி­ய­மாகும் என்ற இயல்­பான சந்­தேகம் பல­ரது மனங்­க­ளிலும் மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் ரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வரும் இந்தச்­சந்­தே­கத்தை நியா­யப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அர­சாங்கம் ஆயிரம் ரூபா சம்­பள விட­யத்தில் விடா­மு­யற்­சி­யுடன் செயற்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். எவ்­வா­றெ­னினும் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பளம் என்­பது அவர்­களின் உழைப்­புடன் ஒப்­பி­டு­கையில் எந்த வகை­யிலும் போது­மா­ன­தாக இல்லை. இருப்­பினும் தமது பொரு­ளா­தார நெருக்­க­டியை ஓர­ள­வேனும் நிவர்த்தி செய்து கொள்­வ­தற்கு இந்தச் ­சம்­பள உயர்வு ஓர­ளவாவது உந்துசக்­தி­யாக அமையும் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. இந்­நி­லையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா­வை­யா­வது பெற்­றுக்­கொ­டுக்க மலை­யக அர­சியல் தொழிற்­சங்­க­வா­திகள் முரண்­பா­டு­களை மறந்து கம்­ப­னி­க­ளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் இந்த நாட்டில் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றார்கள். இம்­மக்கள் மீதான நெருக்­கீ­டுகள் நீண்­ட­ கா­லத்துக்கு முன்­ன­தா­கவே ஏற்­ப­டுத்­தப்­பட்டு விட்­டன. இம்­மக்­களின் ஒவ்­வொரு நகர்­வையும் பேரி­ன­வா­திகள் உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கின்­றனர். தப்பித் தவ­றி­யேனும் இவர்­க­ளுக்கு எது­வித நன்­மையும் கிடைத்­து­வி­டக்­ கூ­டாது என்­பதில் இன­வா­திகள் முனைப்­பாக இருந்து வரு­வ­தை அவ­தா­னிக்­கக்­ கூ­டி­ய­தாக உள்­ளது. பெருந்­தோட்ட காணி சுவீ­க­ரிப்பு, உழைப்­புக்­கேற்ற ஊதி­யத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­காமை, சகல துறைசார் புறக்­க­ணிப்பு நிலை­மைகள் என்­ப­வற்றின் ஊடாக பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் இருப்­பையும் அடை­யா­ளத்­தையும் சிதைப்­ப­தற்கும், இம்­மக்­களை நிர்­வா­ணப் ­ப­டுத்­து­வ­தற்கும் திரை­ம­றையில் திட்­ட­மிட்ட நிகழ்ச்சித் திட்­டத்தின் அடிப்­ப­டையில் காரி­யங்கள் இடம்­பெற்று வரு­வ­தாக ஏற்­க­னவே எம்­ம­வர்கள் பலரும் விச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இன­வாத சிந்­த­னை­யா­ளர்­களின் இத்­த­கைய செயற்­பா­டு­களை இவர்கள் கண்­டித்துப் பேசி இருந்­தனர். எனினும் சாதக விளை­வுகள் ஏற்­பட்­டனவா என்­பது சிந்­திக்­கத்­தக்க விட­ய­மாக உள்­ளது.

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் காலம் கால­மாக பல்­வேறு துறை­க­ளிலும் பின்­ன­டைவு நிலை­மை­யை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். தோட்ட மக்­களின் சமூக, பொரு­ளா­தார நிலைமை குறித்து ஆராய்­வ­தற்­கென்று 1992 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு பெருந்­தோட்ட மக்கள் பின்­வரும் துறை­களில் பின்­தங்கி இருப்­ப­தை தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்டி இருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் குடி­யு­ரிமை, தொழில் வாய்ப்­புகள், கல்வி, தொழிற்­ப­யிற்சி, வீட்டு வச­தியும் சுகா­தா­ரமும், சமூக நலன் பேணல், மின்­சார வசதி, தொடர்­பாடல் வச­திகள், சமூக மற்றும் கலா­சார மேம்­பாடு, விளை­யாட்டு, பொழு­து­போக்கு போன்­ற­வற்­றுக்­கான வச­திகள், பிர­தான தேசிய நீரோட்­டத்தில் இணைந்து கொள்­வ­தற்­கான வாய்ப்­புகள் என்ற விட­யங்கள் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­து.

இந்­நி­லையில் காணிப் ­பங்­கீட்டில் இம்­மக்­க­ளுக்கு எதி­ராகக் காட்­டப்­படும் பார­பட்­சங்கள், தனி­ம­னி­த­ரதும் சமூ­கத்­தி­னதும் பாது­காப்பு தொடர்­பான பிரச்­சி­னைகள் என்­ப­வற்­றையும் இதில் சேர்த்துக் கொள்­வது பொருத்­த­மாக இருக்கும் என்று பேரா­சி­ரியர் எம்.சின்­னத்­தம்பி தனது கட்­டுரை ஒன்­றிலே சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார். மேலும் தேயிலைத் தோட்­டங்­களில் காலத்துக்குக் காலம் எல்லைக் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்டு குடி­யேற்­றங்கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. இவற்றில் தோட்ட மக்­க­ளுக்கு காணித்­துண்­டுகள் வழங்­கப் ­ப­டு­வ­தில்லை. தோட்டக் காணி­களில் இருந்து தோட்ட மக்­களை அப்­பு­றப்­ப­டுத்தி வேறு தேவை­க­ளுக்­காக அக்­கா­ணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்ட பல சந்­தர்ப்­பங்­களும் உண்டு.

1977ஆம் ஆண்டு முதல் இம்­மக்கள் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் உடல் ரீதி­யான தாக்­கு­தல்­க­ளுக்கும் உட்­பட்டு வந்­துள்­ளனர். இவ்­வா­றான தாக்­கு­தல்­களை நடத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக எவ்­வித சட்ட நட­வ­டிக்­கைளும் மேற்­கொள்ளப்படு­வ­தில்லை. நாட்டின் தென் ­ப­கு­தியில் இவ்­வித தாக்­கு­தல்கள் இன்றும் இடம்­பெற்று வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும் என்றும் பேரா­சி­ரியர் எம்.சின்­னத்­தம்பி நினை­வு­ப­டுத்தி இருக்­கின்­றமை நோக்­கத்­தக்­க­து. இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிர­ஜா­வு­ரிமை மற்றும் வாக்­கு­ரிமை என்­பன 1948 இல் பறிக்­கப்­பட்­டன. இதனால் ஏற்­பட்ட பின்­ன­டை­வுகள் இம்­மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அதி­க­மாகும். ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் மலை­யக சமூ­கத்­துக்­கு­மான விரிசல் நிலை இதனால் அதி­க­ரித்­தது. இதனைச் சீர்­செய்ய இன்றும் கூட முடி­யா­தி­ருக்­கின்­றது.

மலை­யக மக்­களின் அபி­வி­ருத்தி கருதி அர­சாங்கம் விசேட உத­விகள் பல­வற்­றையும் வழங்­குதல் வேண்டும். சலு­கை­களைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். இந்­தியா பின் தங்­கிய மக்­களின் நலன் ­க­ருதி பல்­வேறு சலு­கை­களை வழங்கி வரு­கின்­றது. அமெ­ரிக்கா உள்­ளிட்ட உலகின் பல நாடு­க­ளிலும் இந்த நிலை­மைகள் காணப்­படுகின்­றன. இத்­த­கைய உத­வி­களை மலை­யக மக்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் முன்­வர வேண்டும் என்று பல கோரிக்­கை­களும் முன்­வைக்கப் பட்­டி­ருந்­தன. கடந்த நல்­லாட்சி அர­சாங்கம் புதிய அர­சியல் யாப்­பை முன்­வைக் கும் வகையில் காய் நகர்த்­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­தது. மக்கள் கருத்­த­றியும் குழு ஒன்றும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்த மக்கள் கருத்­த­றியும் குழுவின் முன்னால் மலை­யக மக்­களின் பின்­தங்­கிய நிலை­மை­களை இல்­லாது ஒழிப்­ப­தற்கு அர­சாங் கம் பல்­வேறு சலு­கை­களை வழங்­க வேண்டும் என்றும் இச்­ச­லு­கைகள் யாப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்றும் பலரும் கருத்­து­களை முன்­வைத்­தி­ருந்­தனர். எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு கைகூ­டாத நிலையில் எதுவும் சாத்­தி­ய­மா­க­வில்லை.

வேதனம்

நாட்­டி­லுள்ள ஏனைய பல தொழி­லா­ளர்­க­ளு­டன் ஒப்­பி­டு­மி­டத்து பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் குறைந்­த­ளவு வேத­னத்தைப் பெற்று வரு­கின்­றனர் என்­பது தெரிந்த விட­ய­மாகும். இம்­மக்­களின் நன்மை கருதி கூட்டு ஒப்­பந்த நடை­முறை பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­ற­போதும் கூட்டு ஒப்­பந்தம் தொழி­லா­ளர்­க­ளுக்­கு­ரிய சாதக விளை­வு­களைப் பெற்றுக் கொடுத்­ததா என்­பதும் கேள்­விக்­கு­ரிய ஒரு விட­ய­மே.­ பல்­வேறு போராட்­டங்கள் மற்றும் இழு­ப­றி­க­ளுக்கு மத்­தியில் தொழி­லா­ளர்கள் கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக குறைந்­த­ளவு சம்­ப­ளத்­தையே பெற்­றுக்­கொண்­டனர் என்­பதும் நாம் நன்­க­றிந்த ஒரு விட­ய­மே­. இலங்­கையில் பெருந்­தோட்­டங்கள் அமைக்­கப்­பட்ட காலம் முதல் பல்­வே­று­பட்ட தொழிற்­சட்­டங்­களும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இருப்­பினும் 1830களில் ஆரம்­பிக்­கப்­பட்ட பெருந்­தோட்­டங்கள் 1929ஆம் ஆண்டு வரை­யி­லு­மான சுமார் நூறு வரு­டங்­க­ளாக இங்கு வேலை செய்­கின்ற தொழி­லா­ளர்­க­ளுக்­கான அடிப்­ப­டையில் குறைந்­த­பட்ச சம்­பளம் ஒன்றை நிர்­ண­யிக்கும் சட்­டத்தைக் கொண்டு வர­வில்லை என்று வலி­யு­றுத்­தல்கள் பலவும் இடம்­பெற்­றி­ருப்­ப­தையும் காணக்­கூ­டி­ய­தா­கவே உள்­ளது. பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு குறைந்­த­பட்ச வேத­னத்தை நிர்­ண­யிக்க வேண்டும் என்று கூறப்­பட்ட போதெல்லாம் இக்­கோ­ரிக்­கை­யா­னது தோட்ட முகா­மை­யா­ளர்­க­ளுக்கு எரிச்­ச­லூட்டும் விட­ய­மாகக் கரு­தப்­பட்­டது. இது அவர்­களின் விருப்­பங்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­யாகக் கரு­தப்­பட்­டது மட்­டு­மன்றி சோம்­பே­றி­களே குறைந்­த­பட்ச கொடுப்­ப­னவைக் கேட்­பார்கள் என்று வேதனம் மறுக்­கப்­பட்­டது என்­ப­தை கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஷ் போன்­ற­வர்கள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர்.

1927ஆம் ஆண்டில் இந்­தியத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச வேதனச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. 1929ஆம் ஆண்டு வேயிட் என்­ப­வரின் தலை­மையில் குழு­வொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. தொழி­லா­ளர்­களின் வேத­னங்கள் தொடர்­பாக விசா­ர­ணைகள் செய்து நியா­ய­மான வேத­னத்தை சிபா­ரிசு செய்­யு­மாறும் இக்­கு­ழு­விடம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ‘வேயிட் குழு’ மற்றும் வேதனச் சட்­டமும் வேதனம் குறித்து கருத்­துகள் பல­வற்­றையும் முன்­வைத்­தி­ருந்­தன. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கென்று வேதன சபை ஒன்­றை அமைத்தல், குறைந்­த­பட்ச வேத­னத்தை நிர்­ண­யித்தல், தொழி­லா­ளர்­க­ளுக்கு ஒரு மணித்­தி­யா­லத்­துக்­கான பகல் நேர விடு­மு­றை­யுடன் ஒன்­பது மணிநேர வேலை வழங்­குதல், மேல­திக வேலை­க­ளுக்கு மேல­திகக் கொடுப்­ப­ன­வுகள், பத்து வயதுக்கும் குறைந்த பிள்­ளை­களைக் கொண்ட பெற்­றோ­ருக்கு அவர்கள் 16 வயது வரும் வரை­யி­லான காலப்­ப­குதி வரை மாதாந்தம் இல­வ­ச­மாக 1/8 புசல் அரிசி வழங்­குதல், சிறு­வர்­களை வேலைக்கு அமர்த்­து­வதை தடை செய்தல், தொழி­லா­ளர்­க­ளுக்­கான மாதாந்த கொடுப்­ப­னவு மாதத்தின் பத்தாம் திக­திக்கு முன்­ப­தாக வழங்­கப்­பட வேண்டும், மொத்தக் கொடுப்­ப­னவும் தொழி­லா­ளர்­க­ளுக்கே நேர­டி­யாக வழங்­கப்­பட வேண்டும் போன்ற முக்­கிய விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விட யம் நீண்­ட­ கா­ல­மாக இழு­பறி நிலை­யி­லேயே இருந்து வந்­தி­ருக்­கி­றது. இலங்கை பெருந்­தோட்ட நாளாந்த வேத­னங்கள் குறித்து நாம் ஆராய்­கையில் அது பின்­வ­ரு­மாறு அமை­கின்­றது. 1944ஆம் ஆண்­டுக்கு முன்னர் ஆண்­க­ளுக்­கு­ரிய நாட் சம்­ப­ள­மாக 41 சதமும், பெண்­க­ளுக்­கு­ரிய நாட் சம்­ப­ள­மாக 37 சதமும், சிறு­வர்­க­ளுக்­கு­ரிய நாட்­சம்­ப­ள­மாக 25 சதமும் வழங்­கப்­பட்­ட­தாக தொழில் திணைக்­க­ளத்தின் வரு­டாந்த அறிக்கை ஒன்றில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 1947இல் ஆண்­க­ளுக்கு ஒரு ரூபா 72 சதமும் பெண்­க­ளுக்கு ஒரு ரூபா 38 சதமும் சிறு­வர்­க­ளுக்கு ஒரு ரூபா 12 சதமும் நாளாந்த வேத­ன­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது. 1967இல் ஆண்­க­ளுக்கு மூன்று ரூபா ஒரு சதமும் பெண்­க­ளுக்கு இரண்டு ரூபா 45 சதமும் சிறு­வர்­க­ளுக்கு இரண்டு ரூபா 13 சதமும் வழங்­கப்­பட்­டது. 1984இல் ஆண், பெண் இரு­வ­ருக்கும் 24 ரூபா 23 சதம் நாட் சம்­ப­ள­மா­கவும், 1987 இல் ஆண், பெண் இரு­வ­ருக்கும் 33 ரூபா 92 சதமும் வழங்­கப்­பட்­டது. 1984 இல் மேற்­கொள்­ளப்­பட்ட 44 வீத சம்­பள அதி­க­ரிப்பு முக்­கி­யத்­துவம் மிக்­க­தாகக் காணப்­ப­டு­வ­தாக பேரா­சி­ரியர் மா.செ.மூக்­கையா குறிப்­பி­டு­கின்றார்.

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அவ்­வப்­போது சம்­பள அதி­க­ரிப்பு இடம்­பெற்ற போதும் இது எந்­த­வி­தத்­திலும் போது­மா­ன­தாக இருக்­க­வில்லை என்­பதும் தெரிந்த விட­ய­மாகும். பண­வீக்கம், வாழ்க்கைச் செலவு அதி­க­ரிப்பு, நாட்டின் ஏனைய தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சம்­ப­ளங்கள், அர­சாங்­கத்தின் வரவு செலவுத் திட்­டத்தின் ஊடாக வழங்­கப்­படும் சம்­பள உயர்­வுகள் என்­ப­வற்­றுடன் ஒப்­பி­டு­கையில் பெருந்­தோட்ட மக்­களின் வேதன நிலை­மைகள் மிகவும் குறை­வா­கவே இருப்­ப­தாகப் பலரும் விச­னப்­பட்டுக் கொள்­கின்­றனர்.

கூட்டு ஒப்­பந்தம்

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் நலன்­க­ளுக்கு வித்­திடும் வகையில் கூட்டு ஒப்­பந்தம் இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை கைச்­சாத்­தி­டப்­ப­டு­கின்­றது. தொழி­லா­ளர்­களின் சம்­பள விடயம், தொழி­லா­ளர்­களின் சேம நலன்கள் என்­ப­வற்றில் மேம்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வது இதன் நோக்­கம். கூட்டு ஒப்­பந்தம் செய்து கொள்­வ­தற்கு முந்­திய காலப்­ப­கு­தியில் தொழி­லா­ளர்­களின் சம்­பள சபை­களின் மூல­மா­கவே சம்­பளம் தீர்­மா­னிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. சம்­பள நிர்­ணய சபையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆகக்­கு­றைந்த சம்­ப­ளத்தைத் தீர்­மா­னிப்­பதே சம்­பள நிர்­ணய சபையின் வரம்­புக்கு உட்­பட்ட அதி­கா­ர­மாகும். சம்­பள நிர்­ணய சபை­யால் எதிர்­நோக்­கப்­பட்ட சிக்­கல்கள் பல­வுள்­ளன. எனவே இவற்­றுக்கு மாற்­றீ­டா­கவே கூட்டு ஒப்­பந்த நடை­முறை முன்­வைக்­கப்­பட்­டது.

எனினும் கூட்டு ஒப்­பந்த நடை­முறை எந்­த­ள­வுக்கு தொழி­லா­ளர்­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தது என்­பது சிந்­திக்­கத்­தக்கது. கூட்டு ஒப்­பந்த நடை­முறை குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இது ஓர் அடி­மைச்­சா­சனம் என்றும் மரண சாசனம் என்றும் பல்­வேறு கருத்­துகள் எதி­ரொ­லிக்­கின்­றன. இதே­வேளை கூட்டு ஒப்­பந்­தத்தில் சில சரத்­துகள் தொழி­லா­ளர்­க­ளுக்குப் பாத­க­மாகக் காணப்­ப­டு­வ­தா­கவும் இந்த சரத்­து­களை தொழி­லா­ளர்­க­ளுக்குச் சாத­க­மாக மாற்­றிக்­கொண்டு கூட்டு ஒப்­பந்த நடை­மு­றையைப் பின்­பற்ற வேண்டும் என்றும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள் தொழி­லா­ளர்­களைக் காட்­டிக்­கொ­டுப்­ப­தா­கவும் எதிர்க்­கட்­சி­யினர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வரு­கின்­ற­மையும் நோக்­கத்­தக்க விட­ய­ம். கூட்டு ஒப்­பந்­தத்தில் ஒரு சில தொழிற்­சங்­கங்கள் கைச்­சா­தி­டு­கின்ற நிலைமை மாற்­றப்­பட்டு மலை­ய­கத்தின் அனைத்து தொழிற்­சங்­கங்­களும் இந்த நட­வ­டிக்­கையில் உள்­ளீர்க்­கப்­பட வேண்டும் என்றும் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கூட்டு ஒப்­பந்த நடை­மு­றையின் கீழ் தொழி­லா­ளர்­களின் வேதனக் கட்­ட­மைப்பில் இரண்­டா­யி­ரமாம் ஆண்­டுக்குப் பின்­னரே குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. கூட்டு ஒப்­பந்­தத்­தால் தீர்­மா­னிக்­கப்­படும் சம்­பளம் பின்­வரும் அடிப்­படை விட­யங்­களைக் கொண்­டுள்­ள­தா­கவும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­கேற்ப குறைந்­த­பட்ச அடிப்­படைச் சம்­பளம் தேயிலை விற்­பனை விலையில் ஏற்­படும் மாற்­றங் ­க­ளுக்கேற்ப அதில் ஒரு பங்­கை நாளாந்தக் கொடுப்­ப­னவில் இணைத்துக் கொள்­வது, தோட்­டங்­களில் வழங்­கப்­படும் வேலை­க­ளுக்கு அதி­க­ எண்ணிக்கையில்  வருகை தரும் தொழி­லா­ளர்­க­ளுக்­கான விசேட நாளாந்த கொடுப்­ப­னவு போன்ற அடிப்­படை விட­யங்­களை ஒப்­பந்தம் கொண்­டுள்­ளது. ஒப்­பந்­தத்தின் ஊடான  வரவுக் கொடுப்­ப­ன­வு­களை அனைத்துத் தொழி­லா­ளர்­களும் பெற்­றுக்­கொள்ள முடி­வ­தில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தொழி­லா­ளர்­களின் உடல் சோர்வு நிலைகள், தேவைகள், வேலை வழங்­கலில் உள்ள இழு­பறி நிலைகள் போன்ற பல கார­ணங்­களால் இந்­நிலை ஏற்­ப­டு­கின்­றது. கூட்டு ஒப்­பந்தம் தொழி­லா­ளர்­க­ளுக்கு உரிய நன்­மை­களைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வில்லை என்­பதால் மாற்­று­முறை குறித்து கவனம் செலுத்த வேண்­டும என்றும் கோஷங்கள் எழு­கின்­றன.

இத­னி­டையே வெளியார் உற்­பத்தி முறை குறித்து இப்­போது அதி­க­மா­கவே பேசப்­பட்டு வரு­கின்­றது. இம்­மு­றையின் மூலம் தொழி­லா­ளர்கள் நில­வு­டைமைச் சமூ­க­மாக உரு­வெ­டுக்கும் வாய்ப்­புகள் காணப்­ப­டுவ­தா­கவும் அதி­க­ள­வி­லான வரு­மா­னத்­தைப் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு ஏற்­ப­டு­மென்றும் கருத்து வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. தொழி­லா­ளர்­களின் தேயிலைத் தொழிற்­துறை தொடர்­பான அனு­ப­வ­மா­னது இம்­மக்கள் அதி­க­ரித்த உற்­பத்­தி­யைப் பெற்றுக் கொள்ள உந்துசக்­தி­யாக அமையும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை வெளியார் உற்­பத்தி முறை தொழிற்­சங்­கங்­களின் ஆதிக்­கத்தை கேள்­விக்­கு­றி­யாக்கக் கூடு­மென்றும் கருத்­துகள் தெரி­விக்­கின்­றன.

வேத­னமும் வறு­மையும்

வேதனம், வறுமை என்ற இரண்­டுக்கும் இடையில் நெருங்­கிய தொடர்பு காணப்­ப­டு­கிறது. வேதன அதி­க­ரிப்பின் ஊடாக பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­டு­கையில் வறுமை குறைகின்­றது. வேதனப் பற்­றாக்­கு­றைக்கு மத்­தியில் பொரு­ளா­தார நெருக்­கடி மேலெ­ழுகின்ற போது வறுமை தாண்­ட­வ­மா­டு­கின்­றது. மலை­யக பெருந்­தோட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு மத்­தியில் வறுமை இவர்­களை விடு­வ­தாக இல்லை. இவர்­களைப் பின் தொட­ர்­கின்ற ஒரு நிலையே காணப்­ப­டு­கின்­றது. பெருந்­தோட்ட வர­லாற்றின் ஆரம்ப காலங்­களில் பெரும்­பாலும் தொழி­லா­ளர்கள் யாவ­ருமே  கங்­கா­ணி­மா­ரிடம் கடன்­பட்­ட­வர்­க­ளா­கவே இருந்­துள்­ளனர். கடனில் பிறந்து கடனில் வளர்ந்து கட­னி­லேயே இவர்கள் மடிந்­தி­ருப்­ப­தாக முக்­கி­யஸ்­தர்கள் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர். தொழி­லா­ளர்கள் தோட்ட  நிர்­வா­கி­களிடமும் கடன்­பட்­டி­ருந்­தனர். வேத­னங்­களை வழங்கும் நட­வ­டிக்கை கங்­கா­ணி­யி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்ட நிலையில் வேத­னங்கள் முறை­யாக வழங்­கப்­ப­ட­வில்லை.

‘சம்­ப­ளங்கள் வழங்கும் விட­யத்தில் தோட்ட நிர்­வா­கிக்கும் தொழி­லா­ளர்­க­ளுக்கும் இடையில் தொடர்­பை ஏற்­ப­டுத்­து­ப­வ­ராக தலைமைக் கங்­காணி விளங்கினார். தொழி­லா­ளர்கள் சம்­பந்­தப்­பட்ட நிதி விஷயங்­க­ளுக்கு அவரே பொறுப்­பா­ள­ராக விளங்­கினார். அத்­துடன் தொழி­லா­ளர்­களின் பல்­வேறு உள்­ வி­வ­கா­ரங்­களும் அவ­ரு­டைய கட்­டுப்­பாட்­டி­லேயே இருந்தன. கங்­காணி மாதச் சம்­ப­ளத்தைப் பெற்­ற­துடன் வேலைக்கு வரும் ஒவ்­வொரு தொழி­லா­ளிக்கும் ஒரு நாளைக்கு இரண்டு சதம் என்ற முறையில் தலைப்­பணம் எனப் பெயர் பெற்ற தரகுப் பணத்தைப் பெற்றார்’ என்று பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் தனது ‘இலங்கை இந்­தியர் வர­லாறு’ என்ற நூலில் கோடிட்டுக் காட்­டு­கின்றார். இலங்­கையில் வறு­மையின் துறைசார் போக்­குகள் குறித்து நாம் ஆராய்­கையில் அது பின்­வ­ரு­மாறு அமை­கின்­றது. 1990/91 இல் இலங்­கையின் வறுமை நிலை 26.1 வீத­மாக இருந்­தது. தோட்­டத்­துறை வறுமை 20.5 வீத­மாக இருந்­தது. 1995/96 இல் இலங்­கையின் வறுமை நிலை 28.8 வீத­மா­கவும் தோட்­டத்­துறை வறுமை நிலை 38.4 வீத­மா­கவும் இருந்­தன. 2001/02 இல் தோட்­டத்­துறை வறுமை 30 வீத­மா­கவும் 2012/13  இல் 10.9 வீத­மா­க­வும் இருந்­தது. தோட்டத் துறையில் வறுமை நிலை வீழ்ச்சி கண்­ட­தாக புள்ளி விபரங்கள் வெளிப்­ப­டுத்­தி­ய­போதும் இதன் நம்­ப­கத்­தன்மை தொடர்பில் கேள்வி எழுப்­பப்­பட்டு வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­து.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் வறுமை நிலை இம்­மக்கள் பல துறை­க­ளிலும் வீழ்ச்சி காண்­ப­தற்கு உந்துசக்­தி­யாகி இருக்­கின்­றது என்­பதும் தெரிந்த விட­ய­மே. இதனால் இவர்­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. ஏனைய இனங்கள் முன்­னேறிச் செல்­கையில் பெருந்­தோட்ட மக்­களின் வறுமை நிலை முன்­னேற்­றத்­துக்குத் தடை­யாக விளங்­கு­கின்­றது. எனவே இந்த மக்­க­ளுக்கு உரிய சம்­பள அதி­க­ரிப்­பையும் ஏனைய  பொரு­ளா­தார மேம்­பாட்டு உத­வி­க­ளையும் வழங்கி இவர்­களை தேசிய நீரோட்­டத்தில் இணைத்­துக்­கொள்ள வேண்­டிய ஒரு தேவை காணப்­ப­டு­கின்­றது.

ஆயிரம் ரூபா

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாட் சம்­ப­ள­மாக ஆயிரம் ரூபா­வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோஷங்கள் நீண்ட கால­மா­கவே எதி­ரொ­லித்து வரு­கின்­றன. நல்­லாட்சிக் காலத்­திலும் இது எதி­ரொ­லித்­தது. ஆயிரம் ரூபாவை தொழி­லா­ளர்­க­ளுக்கு பெற்­றுக் ­கொ­டுப்போம் என்று மேடையில் முழங்­கி­ய­வர்கள் பின்னர் மெள­ன­மா­கினர். இந்த நிலையில் கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் ஆயிரம் ரூபா சம்­பள விடயம் மீண்டும் எதி­ரொ­லித்­தது. சஜித் பிரே­ம­தாசதான் ஜனா­தி­ப­தி­யானால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1500 ரூபா பெற்றுக் கொடுக்கப் போவ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். இதே­வேளை, பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ளரும் தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யு­மா­ன கோத்­த­பாய தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபாவை வழங்க உள்­ள­தாக வலி­யு­றுத்தி இருந்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இச்சம்பள அதிகரிப்புக்காக அழுத்தம் கொடுத்திருந்தது. மலையக மக்களின் மேம்பாடு கருதிய 32 அம்ச கோரிக்கைகளையும் கோத்தபாயவிடம் இ.தொ.கா. முன்வைத்திருந்த நிலையில் அதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் தெவித்திருந்தது.

இதனிடையே பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நிச்சயமாக ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருக்கின்றார். சம்பள உயர்வு குறித்த ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி 13ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட இருந்தது  எனினும் சில சரத்துகள் தொழிலாளர்களுக்குப் பாதகமாக இருந்ததால் அவற்றில் திருத்தம் மேற்கொள்ளுமாறு தாம் பணிப்புரை விடுத் ததாகவும் இதன் காரணமாக நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆறு முகன் தொண்டமான் தெரிவித்திருந்தார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் அரசாங்கத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு செல்வாக்காக இருந்த ஆறு பேரும் ஆயிரம் ரூபா தொடர்பில் பேசுவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது. ஐயா  காலத்தில் இருந்து காங்கிரஸ் தான் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்தது.  எதிர்காலத்திலும் நாம்தான் பெற்றுக் கொடுப்போம். அதில் துளியளவும் சந்தேகம் கிடையாது என்றும் ஆறுமுகன் தெரிவித்திருக்கின்றார். இதேவேளை பெருந்தோட்டத் தொழிலா ளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டதைப் போல ஆயிரம் ரூபா சம்பளம் நிச்சயம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் தெரிவித்திருக்கின்றார்.

ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் கம்பனிகளிடையே ஒருமித்த போக்கு காணப்படாது இழுபறி நிலை காணப்படு வதாகவே தெரிவிக்கப்படுகின்றது. தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதில் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவதாக  ராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். ஆனால் அரசாங் கத்தின் விடாமுயற்சியான போக்கையும் அவர் குறிப்பிட்டுக் கூறி இருக்கின்றார். இத்தகைய கருத்து வெளிப்பாடுகளுக்கும் இழுபறிகளுக்கும் மத்தியில் ஆயிரம் ரூபா சாத்தியமா? அரசாங்கம் கம்பனிகளை திருப்திப்படுத்தி எவ்வாறு இலக்கை அடையப் போகின்றது? கம்பனிகள் மசியுமா? பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

- துரைசாமி நடராஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13