அனைத்து பிரேரணைகளிருந்தும் தனித்து நீங்க முடியாது - வாசுதேவ 

Published By: Vishnu

24 Feb, 2020 | 03:56 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மனித உரிமை பேரவையில் எமக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அனைத்து பிரேரணைகளில் இருந்தும் தனித்து நீங்க முடியாது எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடனே நீங்குவோம் என்றும் கூறினார்.

இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உருமை பேரவைக்கு அமெரிக்கா கொண்டுவந்த 30/1 பிரேரணைக்கு கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தன்னிச்சையாக கைச்சாத்திட்டிருந்தார். 

அவ்வாறான பிரேரணைக்கு கைச்சாத்திடுவதாக இருந்தால் அதுதொடர்பில் அமைச்சரவைக்கு தெரிவித்து அனுமதியை பெற்றுக்கொள்வதுடன் பாராளுமன்றத்துக்கும் அறிவித்திருக்கவேண்டும். 

ஆனால் அமைச்சரவைக்கும் தெரிவியாது, ஜனாதிபதிக்கும் அறிவிக்காமலே மங்கள சமரவீர கைச்சாத்திட்டிருக்கின்றார்.

அத்துடன் கடந்த ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின்போதும் குறித்த பிரேரணையின் 40/1க்கும் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஆனால் எமக்கு எதிராக யுத்தக்குற்றம் தெரிவித்து ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு பிரேரணை கொண்டுவந்த அமெரிக்கா, மனித உரிமை பேரவையில் இருந்து விலகியுள்ளது. 

அவ்வாறான நிலையில் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிவந்த நாங்கள் பிரேரணையில் இருந்து நீங்குவதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதில் கைச்சாத்திட்ட மங்கள சமரவீரவுக்கு பிரச்சினை ஏற்படலாம். ஏனெனில் அவர் இலங்கை அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலே அதில் கைச்சாத்திட்டிருக்கின்றார். அவரின் நடவடிக்கை தேசத்துரோக செயலாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18