தென் சூடான் ஐக்கிய அரசாங்கம் : முதலாவது உப ஜனாதிபதியாக கிளர்ச்சித் தலைவர் பதவியேற்பு

Published By: Digital Desk 3

24 Feb, 2020 | 01:25 PM
image

தென் சூடானின்  முத­லா­வது உப ஜனா­தி­ப­தி­யாக முன்னாள் கிளர்ச்சித் தலைவர் ரெயிக் மசார் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை பத­வி­யேற்றார்.

இதன் மூலம் அவர் அர­சாங்­கத்­துடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்து செயற்­ப­ட­வுள்ளார். உள்­நாட்டுப் போரை முடி­வுக்கு கொண்டுவந்து நாட்டில் சமா­தா­னத்தை நிலை­நாட்டும் முயற்­சியின் அங்­க­மா­கவே அவ­ரது பத­வி­யேற்பு நிகழ்வு இடம்­பெற்­றது.

இது தொடர்பில் தென்சூடான் ஜனா­தி­பதி சல்வா கிர் தெரி­விக்­கையில், இது போருக்­கான உத்­தி­யோ­க­பூர்வ முடி­வாகும் என்று கூறினார். 2018ஆம் ஆண்டு சமா­தான உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­ட­தை­ய­டுத்து  பல்­வேறு பிரச்­சி­னைகள் கார­ண­மாக ஐக்­கிய அர­சாங்­கத்தை ஸ்தாபிக்கும் முயற்­சி­யி­ல­ிருந்து  சல்வா கிர் இரு தட­வைகள் பின்­வாங்க நேர்ந்­தது.  இந்­நி­லையில்  ஒரு வருட காலத்­திற்கும் அதி­க­மான தாம­தத்­தை­ய­டுத்தே தற்­போது ஐக்­கிய அர­சாங்கம் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக் கது.

புதி­தாக முத­லா­வது உப ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற கிளர்ச்சித் தலைவர் 36 மாதங்­க­ளுக்கு அர­சாங்­கத்தில் சேவை­யாற்­ற­வுள்ளார்.

தற்­போ­தைய அர­சாங்கம் மற்றும் எதிர்­கட்சிக் குழுக்­க­ளைச் சேர்ந்த ஏனைய 4 உப ஜனா­தி­ப­திகள்  அர­சாங்­கத்தின் 35 அமைச்­சர்­களில் அங்­கத்­துவம் வகிக்­க­வுள்­ளனர்.

தென் சூடானில்  இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில்  400,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52