புனிதர் பட்டம் பெறுவதற்கான தகுதியைபெறும் முதல் தமிழரான முத்­திப்­பே­று­பெற்ற தேவ­ச­கா­யம்­பிள்ளை

24 Feb, 2020 | 12:18 PM
image

இந்­தி­யாவின் தமிழ்­நாட்டைச் சேர்ந்த மறை­சாட்­சி­யான முத்­திப்­பே­று­பெற்ற தேவ­ச­கா­யம்­பிள்ளை உட்­பட, மேலும் இரு­வரின் பரிந்­து­ரை­களால் நடை­பெற்ற அற்­பு­தங்­களை பாப்­ப­ரசர் பிரான்சிஸ் அங்­கீ­க­ரித்­துள்­ள­மை­யினால் அவர்­க­ளுக்கு புனிதர் பட்டம் வழங்­கு­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக வத்­திக்கான் ஊடகம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

புனிதர் பட்ட பேராய குழுவின் தலைவர் கர்­தினால் ஆஞ்­சலோ பெச்சு ஆண்­டகை, பாப்­ப­ரசர் பிரான்­சிஸை கடந்த வெள்­ளிக்­கி­ழமை வத்­திக்கான் அரண்­ம­னையில் சந்­தித்து இம்­மூ­வரின் பரிந்­து­ரை­களால் நடை­பெற்ற அற்­பு­தங்கள் குறித்த விவ­ரங்­களை சமர்ப்­பித்தார்.

இவர்­க­ளது அற்­பு­தங்­களை பாப்­ப­ரசர் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ளார். இதனால் அவர்கள் புனிதர் பட்டம் பெறுவதற்கான தகுதியைப் பெறுகின்றனர்.  இதன்மூலம் புனிதர் பட்டம் பெறும் முதல் தமிழர் என்ற பெரு­மையை முத்­திப்­பே­று­பெற்ற தேவ­ச­கா­யம்­பிள்ளை பெறு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

மறை­சாட்­சி­யான முத்­திப்­பேறு பெற்ற தேவ­ச­கா­யம்­பிள்ளை, தமிழ்­நாட்டின் குமரி மாவட்­டத்­தி­லுள்ள நட்­டாலம் என்னும் கிரா­மத்தில், 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பிறந்தார்.

கிறிஸ்­தவ விசு­வா­சத்தில் உறு­தி­யாக இருந்­ததால், கோபம்­கொண்ட திருவிதாங் கூர் அரசர் மார்த்­தாண்ட வர்மா, தேவ­ச­கா­யம்­பிள்­ளைக்கு மரணதண்­டனை விதிப்­ப­தற்­காக சிறையில் அடைத்தார்.

அவ­ரு­டைய உடம்பில் கரும்­புள்­ளியும், செம்­புள்­ளியும் குத்­தப்­பட்­டன. கைகள் பின்­பு­ற­மாக கட்­டப்­பட்டு கழுத்தில் எருக்கம் பூமாலை அணி­விக்­கப்­பட்டு, எருமைமாட்டின் மீது பின்­னோக்கி அம­ர­வைத்து அவரை ஊர் ஊராக அழைத்துச் சென்­றார்கள். 1752 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 14 ஆம் திகதி திரு­வி­தாங்கூர்  அரசர் மார்த்­தாண்ட வர்­மாவின் ஆணைப்­படி தேவ­ச­கா­யம்­பிள்­ளையை குமரி மாவட்டத் தின் ஆரல்­வாய்­மொ­ழியில் உள்ள காற்­றாடி மலையில் சுட்டுக்கொலை செய்­யப்­பட்டார். மறை­சாட்­சி­யாக மரித்த முத்­திப்­பேறு­பெற்ற தேவ­ச­கா­யம்­பிள்­ளையின் கல்லறை, கோட்­டாறு மறை­மா­வட்­டத்தின் புனித சவே­ரியார் முதன்மைக் கோவிலில் உள்­ளது.

ஓய்­வு­பெற்ற பாப்­ப­ரசர் பதி­னாறாம் பெனடிக்ட், தேவ­ச­கா­யம்­பிள்­ளையை ''முத்­திப்­பேறு பெற்­றவர்'' என்ற நிலைக்கு உயர்த்தி அதி­கா­ர­பூர்­வ­மாக அப்­போஸ்­த­லிக்க ஆணை வெளி­யிட்டார்.  2012 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பாப்­ப­ர­சரின் பிர­தி­நி­தி­யாக இந்­தி­யா­வுக்கு சென்ற கர்­தினால் ஆஞ்­சலோ அமாத்தோ ஆண்­டகை,  கோட்­டா­றி­லுள்ள தேவ­ச­கா­யம்­பிள்­ளையின் கல்­லறை அமைந்­துள்ள ஆல­யத்தில் பாப்­ப­ர­சரின் ''முத்­திப்­பேறு பெற்­றவர்'' என்ற அப்­போஸ்­த­லிக்க ஆணையை வாசித்தார். இந்த சிறப்பு வழி­பாட்டில் தமிழ்­நாட்டின் பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் இந்­தி­யாவின் பல மாநி­லங்­களில் இருந்தும் ஏரா­ள­மான பக்­தர்கள் கலந்­து­கொண்­டனர்.

முத்திப்பேறு பெற்ற தேவசகாயம்பிள் ளையை அதிகாரபூர்வமாக புனிதராக அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் இந்திய ஆயர் பேரவை மேற்கொண்டிருந்தது. இதன்படி அவரது பரிந்துரையால் நடைபெற்ற அற்புதங்கள் வத்திக்கானுக்கு அனுப்பப் பட்டு பாப்பரசரினால் அங்கீகரிக்கப்பட்ட மையினால் அவர் புனிதராகும் தகுதியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-கீதன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22