இந்தியாவை இலகுவாக வீழ்த்திய நியூஸிலாந்து அணி!

Published By: Vishnu

24 Feb, 2020 | 01:29 PM
image

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.

வெலிங்டனில் இடம்பெற்று வந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 

அதன் பின்னர் பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 348 ஓட்டங்களை குவித்தது. 183 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் முக்கிய 4 விக்கெட்களை இழந்து 1‌4‌‌‌4 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 4 ஆம் நாள் ஆட்டத்தை ரஹானே, விஹாரி இணை தொடங்கியது. 

இன்றைய ஆட்டத்தின் போல்ட் வீசிய 3 ஆவது ஓவரில், களத்தில் நின்று நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்த ரஹானே 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து விஹாரி 15 ஓட்டங்களிலும், அஸ்வின் 4 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய ‌அணி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

இதனால் 9 ஓட்டம் எடுத்தால் வெற்றி ‌என எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 ஆவது ஓவரிலேயே வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இப் போட்டியில் 9 விக்கெட்களை கைப்பற்றிய நியூசிலாந்து அணியின் டிம் சவுதி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Photo credit : ‍ICC

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58