அமெரிக்கா-புளொரிடாவிலுள்ள டிஸ்னிலேன்டிற்கு (Disney Land) சுற்றுலாச் சென்றிருந்த போது முதலையொன்றினால் இழுத்துச் செல்லப்பட்ட 2 வயது குழந்தையின் சடலமானது இன்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

லேன் கிரேவ்ஸ் என்னும் குறித்த குழந்தை நேற்று தனது தந்தையுடன் சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த போது குளத்தருகே இருந்த முதலையொன்று குழந்தையை நீரினுள் இழுத்துச் சென்றுள்ளது.

குறித்த குழந்தையின் தந்தை முதலையிடமிருந்து குழந்தையை காப்பாற்ற கடுமையாக முயற்சித்த போது குழந்தையை காப்பாற்ற முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.