ஜெனிவா சமர் இன்று ஆரம்பம்: கடும் அதி­ருப்­தியை வெளி­யி­ட­வுள்ள மிச்செல், குட்­டரஸ்

Published By: J.G.Stephan

24 Feb, 2020 | 01:03 PM
image

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை காலை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கின்­றது. எதிர்­வரும்  மார்ச் மாதம்  20 ஆம் திக­தி­ வரை நடை­பெ­ற­வுள்ள இந்த கூட்டத்  தொடரில் எதிர்­வரும் 27 ஆம் திகதி இலங்கை தொடர்­பான  விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. 

அதே­வேளை  30/1 என்ற பிரே­ர­ணைக்கான அனுசரணையிலிருந்து வில­கு­வ­தாக இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன இம்­முறைக் கூட்டத் தொடரில் அறி­விக்­க­வுள்ளார்.  

இம்­முறைக் கூட்டத் தொடரில் அர­சாங்க தூதுக்­கு­ழு­வினர்  தமிழ்  மக்­களின் பிர­தி­நி­திகள்   பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள் என பல்­வேறு தரப்­பினர் பங்­கேற்­க­வுள்­ளனர். 

இன்­றைய ஆரம்ப அமர்வில்  ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்­டரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர். இதன்­போது இலங்கை குறித்தும் பிரஸ்­தா­பிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  குறிப்­பாக  பிரே­ரணை விட­யத்தில்  கடும் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இது இவ்­வாறு இருக்க 30–1 பிரே­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை வில­கு­வ­தாக  அறி­வித்­துள்ள நிலையில் இம்­முறைக் கூட்டத் தொடர் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.  

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே எதிர்­வரும்  26 ஆம் திகதி வெளி­வி­வ­கார அமைச்சர்  தினேஷ் குண­வர்த்­தன இலங்­கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் உரை­யாற்­ற­வி­ருக்­கின்றார்.   அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன நாளை 25 ஆம் திகதி ஜெனிவா வந்­த­டைவார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இதே­வேளை  இலங்கை தொடர்­பான அறிக்­கையை   ஐக்­கிய நாடுகள் மனித உரிமை  ஆணை­யாளர்   மிச்செல் பச்லெட் ஏற்­க­னவே வெ ளியிட்­டி­ரு­க­கின்றார். அவர் அதன் சாரம்­சத்தை பேர­வையில் எதிர்­வரும்  27  ஆம் திகதி  முன்­வைக்­க­வுள்ளார்.  

அதன்­படி மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை  தொடர்­பா­கவே எதிர்­வரும் 27  ஆம் திகதி பேர­வையில் விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.  இந்த விவா­தத்தில்  இலங்­கையின் பிர­தி­நி­திகள் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலரும் உரை­யாற்­ற­வுள்­ளனர். 

இலங்கை குறித்த அறிக்­கையை மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட்  இலங்­கைக்கு ஏற்­க­னவே சமர்ப்­பித்­தி­ருந்­த­போ­திலும்  இலங்கை அதற்கு  பதி­ல­ளிக்­க­வில்லை.    

அனந்தி ஜெனி­வாவில்

இதே­வேளை இலங்­கை­யி­லி­ருந்து பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்பில் பல்­வேறு பிர­தி­நி­திகள் பங்­கேற்­க­வுள்­ளனர்.  தற்­போ­தைய நிலை­மையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்  அனந்தி சசி­தரன் ஜெனிவா வருகை தந்­துள்ளார்.

ஜெனி­வா­வுக்கு படை­யெ­டுக்கும் தமி­ழக முக்­கி­யஸ்­தர்கள் 

இது இவ்­வாறு இருக்க இம்­முறைக் கூட்டத் தொடரில் தமி­ழ­கத்­தி­லி­ருந்து அர­சி­யல்­வா­திகள் சிவில் செயற்­பாட்­டா­ளர்கள் உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். 

விடு­தலை சிறுத்­தைகள் கட்­சியின் தலைவர் தொல் திரு­மா­வ­ளவன் இந்து மக்கள் கட்­சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேரா­சி­ரி­யர்­க­ளான அருட்­தந்தை குழந்­தை­சாமி ஷேவியர் இளம்­ப­ரிதி வைத்­திய தாயப்பன் டெல்லி உச்ச நீதி­மன்ற வழக்­க­றிஞர் பிரபு மகா­ராஷ்­டிரா மாநில வழக்­க­றிஞர் நிலேஷ் யுக்கி உள்­ளிட்ட பலரும் பங்­கேற்­க­வுள்­ளனர். 

கடந்த  2015 ஆம் ஆண்டு  இலங்கை குறித்த  30-1 என்ற  பிரே­ரணை  ஜெனி­வாவில்  நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்கு  அப்­போ­தைய இலங்கை  அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அதா­வது 2017 ஆம் ஆண்­டா­கும்­போது இந்த பிரே­ர­ணையை நிறை­வேற்­ற­வேண்டும் என்று  அதில் கோரப்­பட்­டி­ருந்­தது. 

எனினும் அக்­கா­லப்­ப­கு­தியில்  பிரே­ரணை  முழு­மை­யாக நிறை­வே­றா­ததன் கார­ண­மாக   2017 ஆம் ஆண்டு   30-1 என்ற பிரே­ரணை      மேலும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு நிறை­வேற்­றப்­பட்­டது.   அது 34-1 என்ற பிரே­ரணை ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது.   2019 ஆம் ஆண்­டா­கும்­போது 30-1 என்ற பிரே­ர­ணையை  முழு­மை­யாக அமு­லாக்­க­வேண்டும் என்று  தெரி­வித்தே  34-1 என்ற பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. 

எனினும் 2019 ஆம் ஆண்­டுக்­குள்ளும் 30-1 என்ற  பிரே­ரணை  முழு­மை­யாக  நிறை­வேற்­றப்­ப­டா­ததன் கார­ண­மாக தற்­போது 40-1 என்ற பெயரில் புதிய பிரே­ரணை  நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அதா­வது  ஆரம்­பத்தில்  2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30–1 என்ற பிரே­ர­ணையே  தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்துள்ளது.    தற்போது இந்தப் பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இதேவேளை  ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 30–1 என்ற பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பில்   ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நெருக்கமான கண்காணிப்பை இலங்கை மீது மேற்கொள்ளவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார். 

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50