இனவாத பிடியிலிருந்து அரசால் மீள முடியாது என்பது சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் உறுதியாகியுள்ளது - இம்ரான் எம்.பி

Published By: Digital Desk 4

23 Feb, 2020 | 02:05 PM
image

இனவாத பிடியில் இருந்து இந்த அரசால் மீள முடியாது என்பது சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் உறுதியாகியுள்ளது என பாராளுமன்றஉறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். 

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் இந்த அரசால் அப்பிரதேச மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.அவர்களின் நீண்டகால கோரிக்கையான தனியான நகரசபையை வழங்குவதாக வர்தமானி வெளியிட்டபின் அந்த வர்தமானியை ரத்து செய்வதாக கூறுவது இந்த அரசு இனவாத நிகழ்ச்சிநிரலை தாண்டி செயற்பட முடியாது என்பதுக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். 

இவ்வாறாக இனவாதிகளின் பிடியில் உள்ள இந்த அரசு கேட்பதை போல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோ ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையோ கிடைத்தால் சிறுபான்மையிருக்கு அந்த அரசில் என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

எமது அரசின் காலத்திலும் நுவரேலியாவில் புதிதாக ஆறு சபைகளை உருவாக்கினோம். அப்பொழுதும் எமக்கு இனவாதிகளிடம் இருந்து அழுத்தங்கள் வந்தன. அதற்காக நாங்கள் அதை ரத்து செய்யவில்லை.

அதேபோன்று எமது அரசும் சாய்ந்தமருது விடயத்தில் நூறுவீதம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்பதே எனது நிலைப்பாடு. சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை வழங்கும்போது கல்முனை நகருக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் சிறந்த தீர்வொன்றை பெறவே அன்றைய எமது அரசு முயற்சி செய்து அதற்கான எல்லை பிரிப்பையும் செய்தது. அதை வர்தமானியில் அறிவிக்க காலம் தாழ்த்தியமையே எமது அரசு விட்ட தவறு.

இந்த நகரசபை விடயத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கண்டிக்கத்தக்கன. இது தொடர்பான உண்மைத்தன்மையை அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். எதிர்காலங்களில் இவ்வாறான கருத்துக்களை அவர்கள் வெளியிடமாட்டார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29