ஜெனீவா செல்லும் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக முக்கிஸ்தர்கள் 

Published By: J.G.Stephan

23 Feb, 2020 | 11:24 AM
image

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பந் ஆகியோர் ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளனர். 

அத்துடன் பேராசிரியர்களான அருட்தந்தை குழந்தைசாமி, சேவியர், இளம்பரிதி, ஆகியோரும் வைத்தியர் தாயப்பன் டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு, மஹாராஷ்ரா மாநிலத்தினைச் சேர்ந்த வழக்கறிஞர் நிலேஷ்யுக்கி ஆகியோரும் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அடுத்து வரும் நாட்களில் செல்லவுள்ளனர்.

ஜெனீவா அமர்வில் பங்கேற்கும் இவர்கள் தமிழர் தாயகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து தமது கருத்துக்களை பதிவு செய்யவுள்ளதோடு இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச்செய்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளதாக அறியமுடிகின்றது. 

மேலும் இலங்கை அரசாங்கம் ஜெனீவா பிரேரணையிலிருந்து வெளியேறவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதியை வழங்குவதற்குரிய மாற்றுவழிகளை உடன் கையிலெடுக்குமாறு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை இவர்கள் நேரில் சந்தித்து வலியுத்தவுள்ளனர். 

இதேவேளை, தமிழகத்திலிருந்து மேலும் 15பேர் ஜெனீவா அமர்வில் பங்கேற்பதற்குரிய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06