பிரான்ஸின் பாரிஸ் நக­ரி­லி­ருந்து எகிப்­திய கெய்ரோ நக­ருக்கு 66 பேருடன் பய­ணித்த எகிப்­து­எயார் எம்.எஸ்.804 என்ற விமானம் கடந்த மாதம் 19 ஆம் திகதி காணாமல் போனது.

குறித்த விமானம் மத்தியத்தரைக்கடலில் சிதறி வீழ்ந்ததாக பிரான்ஸ் ஜனா­தி­பதி பிரான்­கொயிஸ் ஹொலண்ட் உறு­திப்­ப­டுத்­த நிலையில், அதன் பாகங்கள் சில தற்போது மத்திய தரைக்கடலில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாய­மான எம்.எஸ்.804 விமா­னத்தில் சம்­பவம் இடம்­பெற்ற போது இரு குழந்­தைகள் மற்றும் ஒரு சிறுவன் உட்­பட 56 பய­ணி­களும் 7 விமான ஊழி­யர்­களும் 3 பாதுகாப்பு உத்­தி­யோ­கத்­தர்­களும் இருந்­தாக எகிப்­து­எயார் விமா­ன­சேவை நிறு­வனம் தெரி­வித்திருந்தது.

குறித்த விமானத்தின் சில பாகங்கள் இதற்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

'