43ஆவது ஜெனிவா கூட்ட தொடர் திங்­கட்­கி­ழமை ஆரம்பம்: 27ஆம் திகதி விவாதம்; அரச தூதுக்­கு­ழுவும் விஜயம்

Published By: J.G.Stephan

22 Feb, 2020 | 09:59 AM
image

(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய நாடுகள்  மனித உரிமைகள் பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கின்­றது. எதிர்­வரும்  மார்ச் மாதம்  20 ஆம் திக­தி­ வரை நடை­பெ­ற­வுள்ள இந்தக் கூட்டத்  தொடரில் எதிர்­வரும் 27 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. 

இம்­முறைக் கூட்டத்  தொடரில் அர­சாங்க தூதுக்­கு­ழு­வினர்,  தமிழ்  மக்­களின் பிர­தி­நி­திகள்,  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நிதிகள் என பல்­வேறு தரப்­பினர் பங்­கேற்­க­வுள்­ளனர். 

30–1 பிரே­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை வில­கு­வ­தாக பிர­தமர் அறி­வித்­துள்ள நிலையில் இம்­முறைக் கூட்டத் தொடர் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.  

எதிர்­வரும்  26 ஆம் திகதி வெளி­வி­வ­கார அமைச்சர்  தினேஷ் குண­வர்த்­தன இலங்­கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் உரை­யாற்­ற­வுள்ள நிலையில் இலங்­கை­யா­னது  மனித உரிமை பேர­வையின் தீர்­மா­னத்­தி­லி­ருந்து வில­கு­கின்­றது என்­ப­தனை அறி­விக்­க­வுள்ளார். 

இதே­வேளை  இலங்கை தொடர்­பான அறிக்­கையை   ஐக்­கிய நாடுகள் மனித உரிமை  ஆணை­யாளர்   மிச்செல் பச்லெட் அறி­வித்­துள்ளார். அவர் அதன் சாரம்­சத்தை பேர­வையில் முன்­வைக்­க­வுள்ளார்.  

மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை  தொடர்­பா­கவே எதிர்­வரும் 27  ஆம் திகதி பேர­வையில் விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.  இந்த விவா­தத்தில்  இலங்­கையின் பிர­தி­நி­திகள் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலரும் உரை­யாற்­ற­வுள்­ளனர். 

இலங்கை குறித்த அறிக்­கையை மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட்  இலங்­கைக்கு ஏற்­க­னவே சமர்ப்­பித்­தி­ருந்­த­போ­திலும்  இலங்கை அதற்கு இன்னும் பதி­ல­ளிக்­க­வில்லை.   வெ ளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன பேர­வையில் உரை­யாற்­று­கின்­ற­போது அறிக்­கைக்கு பதி­ல­ளிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

கடந்த  2015 ஆம் ஆண்டு  இலங்கை குறித்த  30-1 என்ற  பிரே­ரணை  ஜெனி­வாவில்  நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்கு  அப்­போ­தைய இலங்கை  அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அதா­வது 2017 ஆம் ஆண்­டா­கும்­போது இந்த பிரே­ர­ணையை நிறை­வேற்­ற­வேண்டும் என்று  அதில் கோரப்­பட்­டி­ருந்­தது. 

எனினும் அக்­கா­லப்­ப­கு­தியில்  பிரே­ரணை  முழு­மை­யாக நிறை­வே­றா­ததன் கார­ண­மாக   2017 ஆம் ஆண்டு   30-1 என்ற பிரே­ரணை      மேலும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு நிறை­வேற்­றப்­பட்­டது.   அது 34-1 என்ற பிரே­ரணை ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது.   2019 ஆம் ஆண்­டா­கும்­போது 30-1 என்ற பிரே­ர­ணையை  முழு­மை­யாக அமு­லாக்­க­வேண்டும் என்று  தெரி­வித்தே  34-1 என்ற பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. 

எனினும் 2019 ஆம் ஆண்­டுக்­குள்ளும் 30-1 என்ற  பிரே­ரணை  முழு­மை­யாக  நிறை­வேற்­றப்­ப­டா­ததன் கார­ண­மாக தற்­போது 40-1 என்ற பெயரில் புதிய பிரே­ரணை  நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அதா­வது  ஆரம்­பத்தில்  2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30–1 என்ற பிரே­ர­ணையே  தொடர்ந்து நீடிக்­கப்­பட்டு வந்­துள்­ளது.    தற்­போது இந்தப் பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. 

ஜெனிவா பிரே­ரணை  தொடர்­பாக   வெளி­வி­வ­கார  அமைச்­சினால் மீளாய்வு  செய்­யப்­பட்டு வந்த நிலையில்     பிரே­ர­ணை­யி­லி­ருந்து     வில­கு­வ­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது.  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை  இரவு  இது  தொடர்பில் முக்­கிய  கலந்­து­ரை­யாடல் ஒன்று நடை­பெற்­றது.    இதில் ஜனா­தி­பதி  தலை­மையில்  வெ ளிவி­வ­கார அமைச்சர் உள்­ளிட்ட பல முக்­கி­யஸ்­தர்­களும் கலந்­து­கொண்­டனர்.  

இதன்­போது இரா­ணுவ தள­ப­திக்கு எதி­ராக  அமெ­ரிக்­கா­வினால்  விதிக்­கப்­பட்­டுள்ள  பயண தடை மற்றும்   2015 ஆம் ஆண்டில் கடந்த   முன்­னைய அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன்  நிறை­வேற்­றப்­பட்ட 30–1 என்ற பிரே­ரணை குறித்த மீளாய்வு உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது.  அத்­துடன்  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ள­ரினால் இலங்­கைக்கு அனுப்­பப்­பட்­டுள்ள இலங்கை குறித்த இடைக்­கால அறிக்கை தொடர்­பா­கவும் பேசப்­பட்­டுள்­ளது.  

இதன்­போதே பிரே­ர­ணை­யி­லி­ருந்து  வில­கு­வ­தற்கு அர­சாங்­கத்­தினால் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.  

இதே­வேளை  ஜெனி­வாவில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள 30–1 என்ற பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது தொடர்பில்   ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை நெருக்­க­மான கண்காணிப்பை இலங்கை மீது மேற்கொள்ளவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் நிலுவையில் உள்ள  மனித உரிமை மீறல்கள்  தொடர்பான சம்பவங்கள்  குறித்து விரிவான சுயாதீமான பொறுப்புக்கூறல் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்   என்றும்  பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17