"நாம் இனி பங்­கு­தா­ர­ரில்லை": ஜெனி­வாவில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பேன் - வெளிவி­வ­கார அமைச்சர் தினேஷ்

Published By: J.G.Stephan

22 Feb, 2020 | 09:34 AM
image

(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய நாடுகள்  மனித உரிமைகள் பேர­வையில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையில் இலங்கை அர­சாங்கம் இனி பங்­கு­தாரர்  இல்லை என்­ப­தனை நான் எதிர்­வரும் 26 ஆம் திகதி ஜெனி­வாவில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பேன் என்று வெளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். 

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­யா­னது  அர­சி­ய­ல­மைப்­புக்கு விரோ­த­மா­னது. அதற்கு  மக்கள் அங்­கீ­கா­ர­ம­ளிக்­க­வு­மில்லை. 

பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­காரம் கிடைக்­க­வு­மில்லை என்றும்  வெ ளிவி­வ­கார அமைச்சர் குறிப்­பிட்டார். 

ஜெனிவா மனித உரிமை பேர­வையின்  43 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 24 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில்  26 ஆம் திகதி வெ ளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன உரை­யாற்­ற­வுள்ளார்.  அத்­துடன் இலங்­கை­யா­னது 30–1 என்ற ஜெனிவா பிரே­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை வில­கு­வ­தா­கவும் அவர்  அறி­விக்­க­வுள்ளார்.  இது தொடர்பில் அவ­ரிடம் கேட்­ட­போதே இதனை குறிப்­பிட்டார்.  

அவர்  இது தொடர்பில்  மேலும் குறிப்­பி­டு­கையில் 

எதிர்­வரும் 26 ஆம் திகதி நான் ஜெனிவா மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடரில் உரை­யாற்­ற­வுள்ளேன். அதா­வது இலங்­கை­யா­னது 30–1 என்ற பிரே­ர­ணை­யி­லி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெ ளியே­று­கின்­றது என்­ப­தனை நான்  ஜெனிவா பேர­வையில் அறி­விக்­க­வுள்ளேன். 

ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேர­வையில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையில் இலங்கை அர­சாங்கம் இனி பங்­கு­தாரர்  இல்லை என்­ப­தனை நான் ஜெனி­வாவில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வுள்ளேன்.  

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­யா­னது  அர­சி­ய­ல­மைப்­புக்கு விரோ­த­மா­னது. அப்­போது பத­வியில் இருந்த ஜனா­தி­பதி தனக்கு இது குறித்து தெரி­யாது என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.  

மேலும் இந்த பிரே­ர­ணைக்கு   மக்கள் அங்­கீ­கா­ர­ம­ளிக்­க­வு­மில்லை. அதனை பாரா­ளு­மன்­றத்தில்  சமர்ப்­பித்து அங்­கீ­காரம் பெறப்­ப­ட­வு­மில்லை.  எனவே  இது சட்­ட­வி­ரோ­த­மா­னது என்றும் ஜன­நா­ய­கத்­துக்கு எனவும் நான் ஜெனிவா பேர­வையில் அறி­விக்­க­வி­ருக்­கின்றேன். 

இந்த பிரே­ர­ணைக்கு எதி­ரா­கவே  மக்கள் கடந்த தேர்­தலில் ஆணை வழங்­கினர். எனவே  மக்­களின் அங்­கீ­காரம் 30–1 பிரே­ர­ணைக்கு கிடைக்­க­வில்லை.  எனவே அதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்தோம். அந்தவகையில் அரசாங்கத்தின் தீர்மானத்தை நான்  26 ஆம் திகதி அறிவிப்பேன் 

என்ன பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் உள்ளக ரீதியில் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01