கச்சதீவை யாரும் உரிமை கோர முடியாது

Published By: MD.Lucias

16 Jun, 2016 | 08:58 AM
image

கச்சதீவை மீண்டும்  இலங்கையிடமிருந்து யாரும் உரிமை கோர முடியாது.  கச்சதீவு என்பது  இரண்டு நாடுகளுக்கு இடையில்  தீர்க்கப்பட்ட விவகாரமாகும்.  அதனை மீண்டும்  கிளற முடியாது.  இந்திய உச்சநீதிமன்றம் அது தொடர்பில் தெளிவான தீர்ப்பை  அளித்துள்ளது. அந்தவகையில் யாரும் கச்சத்தீவை கேட் க முடியாது  என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்று    தமிழக முதல்வர் ஜெயலலிதா    நீண்டகாலமாக  கோரிவருகின்றார். ஆனால் அது முடியாத காரியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே   அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும்  பெற்றுக்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா  இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றும் கேள்வி எழுப்பப்பட்டது.  

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் 

பதில் கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்று    தமிழக முதல்வர் ஜெயலலிதா    நீண்டகாலமாக  கோரிவருகின்றார்.  அது முடிந்துபோன விடயமாகும்.  அதனை மீண்டும்  இலங்கையிடமிருந்து யாரும் உரிமை கோர முடியாது.  கச்சதீவு என்பது  இரண்டு நாடுகளுக்கு இடையில்  தீர்க்கப்பட்ட விடயமாகும். அதனை மீண்டும்  கிளற முடியாது.  இந்திய உச்சநீதிமன்றம் அது தொடர்பில் தெ ளிவான தீர்ப்பை  அளித்துள்ளது. அந்தவகையில் யாரும் கச்சத்தீவை கேட் க முடியாது. இது மீண்டும் கிளறப்பட முடியாத வகையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஒருவிடயமாகும் என்றார். 

நேற்று முன்தினம் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்திருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா  கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும்  பெற்றுக்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை  முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01