மார்ச் 31ம் திகதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹரி-மேகன்

Published By: Digital Desk 3

24 Feb, 2020 | 02:31 PM
image

பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி, இளவரசி மேகன் மார்கல் தம்பதி அண்மையில் அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் மட்டும் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இளவரசர் ஹரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அவர்களது முடிவுக்கு மதிப்பளித்து, அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது.

தங்களது நேரத்தை வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்து செலவிட போவதாக இந்த தம்பதி அறிவித்த நிலையில், தற்போது இருவரும் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

“ சசெக்ஸ் ரோயல்' ” என பெயரிடப்பட்ட நிறுவனம் ஒன்றையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர். அந்த பெயரில் இணையதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் "ரோயல்" என்னும் பெயரை அவர்கள் உபயோகிக்க பிரிட்டன் இளவரசி தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேவேளை, பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் மார்ச் 31 ஆம் திகதி விலகுகின்றனர்.

இதனையடுத்து ஹரி-மேகன் தம்பதி ஏப்ரல் 1 ஆம் திகதியில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை விவகாரங்களில் இருந்து முழுமையாக வெளியேறிவிடுவர் என கூறப்பட்டுள்ளது. இருவரும் வரும் வாரத்தில் அரண்மனை தொடர்பான நிகழ்ச்சியில், இறுதியாக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13