வுகானிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்- பேருந்துகள் மீது கல்வீச்சு- உக்ரைனில் சம்பவம்

21 Feb, 2020 | 05:44 PM
image

2020 ஜனாதிபதி தேர்தலில் டொனால் டிரம்பை வெற்றி பெறச்செய்வதற்கான முயற்சிகளை ரஸ்யா மீண்டும் ஆரம்பித்துள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் தேர்தல்கள் தொடர்பான சிரேஸ்ட அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு தெரிவித்துள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்பினை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்திருப்பதற்கான இலக்குடன் ரஸ்யா மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம் தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு முழுமையான தகவல்களை வழங்கியுள்ளனர்.

ஹக்கிங்,சமூக ஊடகங்களை ஆயுதமாக்குதல்,தேர்தல் உள்கட்டமைப்புகளை தாக்குதல் உட்பட பல விடயங்கள் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ரஸ்யா டிரம்ப்பை விரும்புகின்றது என தெரிவித்துள்ள புலனாய்வு பிரிவினர் டிரம்ப்பை வெல்லவைப்பதற்கான முயற்சிகளில் மாத்திரம் ரஸ்யா ஈடுபடவில்லை வேறு பல முயற்சிகளிலும் ரஸ்யா ஈடுபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

2016 ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் சார்பில் ரஸ்ய தலையிட்டது என்ற குற்றச்சாட்டு அமெரிக்கா உலுக்கிய நிலையில் மீண்டும் ரஸ்யாவின் தலையீடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016 இல் ரஸ்யா ஹிலாரி கிளின்டனின் வெற்றிவாய்ப்புகளை சிதைக்கும் விதத்தில் செயற்பட்டது என்ற தகவல்கள் காரணமாக ரொபேர்ட் மியுல்லரின் விசேட விசாரணைகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

2020 இல் ரஸ்யா மீண்டும் தலையிட முயல்கின்றது என்ற தகவல்கள் வெளிநாடுகளின் தலையீடுகளை எதிர்கொள்வதற்கான அமெரிக்காவின் பலத்தை சோதிக்கும்  விடயமாக காணப்படுகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

தனது சார்பில் ரஸ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டினை டிரம்ப் தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றார்.

சீனாவின் வுகான் நகரத்திலிருந்து மீட்கப்பட்டவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மீது உக்ரைனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டவர்களுடன் மருத்துவமனையொன்றிற்கு சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது  பொல்டாவா பிராந்தியத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்

சீனாவிலிருந்து மீட்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தலிற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீதே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

45 உக்ரைன் பிரஜைகள் மற்றும் 27 வெளிநாட்டவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த மருத்துவமனையொன்றிற்கு சென்றுகொண்டிருந்த பேருந்திகளை வழிமறித்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகளின் மீது கல்வீச்சினை மேற்கொண்டுள்ளனர்.பேருந்தினை நோக்கி தீப்பந்தங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எறிந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து படையினர் அந்த முற்றுகையை முறியடித்து பேருந்துகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வுகானிலிருந்து அழைத்துவரப்பட்ட சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளது என அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சலே இந்த ஆர்ப்பாட்டங்களிற்கு காரணம் என உக்ரைனின் பாதுகாப்பு சேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கருணையுடன் செயற்படுமாறு உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை வுகானிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கு ஆதரவு வெளியிட்டுள்ள உக்ரைனின் சுகாதார அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுடன் தங்கியிருக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

நான் அவர்களுடன் தங்கியிருந்தே எனது அமைச்சினை ஸ்கைப் மூலம் நிர்வகிக்கப்போகின்றேன் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களின் பதட்டத்தினை குறைப்பதற்கு இதுவே வழி என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10