சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக்கிரியை சனிக்கிழமை

Published By: Raam

16 Jun, 2016 | 10:21 AM
image

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும் மக்கள் சேவை கட்சியின் தற்போதைய தலைவருமான சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக்கிரியை எதிர்வரும் 18 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில்  இடம்பெறவுள்ளது.

சோமவன்ச அமரசிங்க 73 வயதில் நேற்று காலை ராஜகிரியவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலமானார். அன்னாரின் பூதவுடல் களுத்துறையில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது .


மக்கள் விடுதலை முன்னையின் முன்னாள் தலைவரும் மிக நீண்டகாலமாக தலைமைப்பொறுப்பில் இருந்த தலைவருமான சோமவன்ச அமரசிங்க நேற்று அதிகாலையில் இராஜகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 73 வயதாகும் சோமவன்ச கடந்த சில காலமாகவே சுகவீனமுற்று இருந்த நிலையிலேயே நேற்று காலமானார்.

1943ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் பிறந்த சோமவன்ச அமரசிங்க களுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்விகற்றார். பின்னர் 1969ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக்கொண்டார். 1971ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சிப் போராட்ட (ஜே.வி.பி) கிளர்ச்சியில் தன்னை ஒரு இளம் நபராக இணைத்துக்கொண்டார். அப்போராட்டத்தில் போது கைதுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலையின் பின்னர் தன்னை ஒரு அரசியல் பாதையில் இணைத்துக்கொண்ட சோமவன்ச காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவிலும் முக்கிய உறுப்பினராக செயற்பட்டார்.

பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது போராட்ட காலத்தில் அப்போதைய சிரேஷ்ட தலைவர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் உயிர் தப்பிய ஒரே நபரும் இவராவார். பின்னர் நாட்டை விட்டு வெளியேறி சில காலம் தலைமறைவாக கட்சியை வழிநடத்தி வந்தார். மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் நான்காவது தலைவராக 1990ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி நியமிகப்படார்.

அன்றில் இருந்து இருபது வருடகாலம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக சோமவன்ச செயற்பட்டார்.

பின்னர் 1990ஆம் ஆண்டிலிருந்து இருந்து கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு அரசியல் நகர்வுகளில் பயணிக்கவும் தயாரானார். கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணி பலமான ஒரு அரசியல் கட்சியாக செயற்படவும் தமது அரசியல் பாதையை ஜனநாயக ரீதியில் அமைத்துக்கொள்ளவும் சோமவன்ச அமரசிங்கவின் பங்கு முக்கியமானதாக அமைந்தது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் யுத்தம் உக்கிரம் அடைந்திருந்த நிலையில் அப்போதைய அரசாங்கத்துடன் கைகோர்த்து யுத்தத்தை முன்னெடுப்பதற்கும் பங்களிப்பு வழங்குவதில் தமது கட்சியை இணைத்துக்கொண்டார்.

எனினும் அதன் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள், தலைமைத்துவதுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக 2015ஆம் ஆண்டு சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து வெளியேறி மக்கள் சேவை கட்சியை உருவாக்கினார்.

ஜே.வி.பி யின் நிறுவுனரான ரோஹன விஜயவீரவிற்கு பின்னர் கட்சியில் மிக நீண்டகால தலைமை பொறுப்பை வகித்தவர் என்ற புகழும் சோமவன்சவுக்கே உள்ளது. அதேபோல் கட்சியில் இருந்து வெளியேறிய சோமவன்ச கடந்த பொதுத் தேர்தலில் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

கடந்த காலத்தில் இடதுசாரி தலைவராக செயற்பட சோமவன்சவுக்கு கியூபா, சீனா, ரஷ்யா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளினதும் ஏனைய இடதுசாரி நாடுகளில் இருந்தும் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54