டிரம்பை மீண்டும் வெற்றிபெறச்செய்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளது ரஸ்யா- அமெரிக்கபுலனாய்வு அமைப்புகள்

21 Feb, 2020 | 02:32 PM
image

2020 ஜனாதிபதி தேர்தலில் டொனால்டிரம்பை வெற்றிபெறச்செய்வதற்கான முயற்சிகளை ரஸ்யா மீண்டும் ஆரம்பித்துள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் தேர்தல்கள் தொடர்பான சிரேஸ்ட அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு தெரிவித்துள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்பினை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்திருப்பதற்கான இலக்குடன் ரஸ்யா மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம் தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு முழுமையான தகவல்களை வழங்கியுள்ளனர்.

ஹக்கிங்,சமூக ஊடகங்களை ஆயுதமாக்குதல்,தேர்தல் உள்கட்டமைப்புகளை தாக்குதல் உட்பட பல விடயங்கள் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ரஸ்யா டிரம்ப்பை விரும்புகின்றது என தெரிவித்துள்ள புலனாய்வு பிரிவினர் டிரம்ப்பை வெல்லவைப்பதற்கான முயற்சிகளில் மாத்திரம் ரஸ்யா ஈடுபடவில்லை வேறு பல முயற்சிகளிலும் ரஸ்யா ஈடுபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

2016 ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் சார்பில் ரஸ்ய தலையிட்டது என்ற குற்றச்சாட்டு அமெரிக்கா உலுக்கிய நிலையில் மீண்டும் ரஸ்யாவின் தலையீடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016 இல் ரஸ்யா ஹிலாரி கிளின்டனின் வெற்றிவாய்ப்புகளை சிதைக்கும் விதத்தில் செயற்பட்டது என்ற தகவல்கள் காரணமாக ரொபேர்ட் மியுல்லரின் விசேட விசாரணைகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

2020 இல் ரஸ்யா மீண்டும் தலையிட முயல்கின்றது என்ற தகவல்கள் வெளிநாடுகளின் தலையீடுகளை எதிர்கொள்வதற்கான அமெரிக்காவின் பலத்தை சோதிக்கும்  விடயமாக காணப்படுகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

தனது சார்பில் ரஸ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டினை டிரம்ப் தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17