மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்டப் போட்டியில் மன்னார் லயன்ஸ் உதைபந்தாட்டக் கழகம் வெற்றி

Published By: Daya

21 Feb, 2020 | 12:01 PM
image

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 5 ஆம் நாள் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில்  குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த உதைபந்தாட்ட போட்டியானது ஈடன் உதைபந்தாட்ட கழகத்திற்கும்,   மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழகத்திற்குமிடையில் போட்டி இடம்பெற்றது.

முதலில் போட்டி ஆரம்பமாகி 4, 49 ஆவது நிமிடங்களில் மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழக வீரர், ஏ.பி.சி.ஏ.றோச் 2 கோல்களையும், 10 ஆவது நிமிடத்தில் ரி.ராஜ் கமல் மேலும் ஒரு கோலையும்,40 ஆவது நிமிடத்தில் ஏ.ஜே.மாக்கஸ் ஒரு கோலையும்,  53 ஆவது நிமிடத்தில் பி.றோட்னி ஒரு கோலையும் அடித்தனர்.

மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழகம் 5 கோல்களை போட்டுள்ளனர். அதே நேரம் ஈடன் உதைபந்தாட்ட கழக வீரரான ஏ.லக்ஸன் 85 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். இந்த நிலையில் மன்னார் லயன்ஸ் உதைபந்தாட்ட கழகம் 5:1 என்ற கணக்கில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49