யாழில் உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம்

Published By: Digital Desk 4

20 Feb, 2020 | 09:18 PM
image

உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் எதிர்வரும் 21, 22, 23 ஆம் ஆகிய மூன்று தினங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பல நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதே போன்று இங்குள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை இந்தியாவின் தஞ்சாவூர் தமிழ்த் தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் கவிஞர் உடையார்கோவில் குணா யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடாத்தியிருந்தார்.

இதன் போது அவர் தெரிவித்ததாவது,

தஞ்சாவூர் அறக்கட்டளை சார்பாக பல்வேறு தமிழ் இலக்கியப் பணிகளை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டங்களையும் மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடாத்தியிருக்கின்றோம்.

மாலதீவு, அந்தமான், கொல்கத்தா, மலலேசியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மாநாடுகள் கருத்தரங்குகளை நடாத்தி வந்த நாங்கள் கடந்தாண்டு உலகத் தாய்மொழி தனித்தை முன்னிட்டு மலேசியாவில் இருக்கின்ற மலேசியா பல்கலைக்கழகத்தில் உலகத் திருக்குறள் முதலாவது மாநாட்டை நடாத்தியிருந்தோம்.

உலகளாவிய ரீதியில் ஐநூறு பேராளர்கள் கலந்து கொண்ட அறிஞர்கள் கலந்து கொண்ட மாநாடாக அந்த திருக்குறள்  மாநாட விளங்கியது. ஆதனைத் தொடர்ந்து புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் யாழ்ப்பாண மண்ணிலே வாழக்கூடிய உணர்வுமிக்க தமிழ் அறிஞர்களும் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

இந்த திருக்குறள் மாநாட்டை தமிழ்த் தாய் அறக்கட்டளை முன்னெடுத்து நடாத்தினாலும் கூட உலகத் தமிழாராச்சி நிறுவனம், இந்தியாவின் மதுரை காமராஐர் பல்கலைக்கழகம், இதய நிறைவு தியான அமைப்பு, சிறிராமச்சந்த்ர மிஸன், இலங்கை இந்திய தமிழ்த் தாய் அறக்கட்டளையும் இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஒழ்துழைப்புடன் உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் பேராளர்களும் அறிஞர்களும் வருகை தந்திருக்கின்றனர். குறிப்பாக மலேசியாவில் இருந்த 27 பேராளர்களும், தமிழகத்திலிருந்து 150 இற்கும் மேற்பட்ட பேராளர்களும், அதே போல பிரான்ஸ், குவைத், அவுஸ்திரேலியா பேராளர்கள் வருகை தர இருக்கின்றார்கள்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அறிஞர்களுடைய ஆய்வுக் கட்டுரைகளும் சிறப்பு மலரும் வெளியிட இருப்பதோடு மாநாட்டினுடைய முத்தாய்வாக கருங்கல்லினால் செய்யப்பட்ட இரண்டு திருவள்ளுவர் சிலையை மாநாட்டிற்கு வருகின்றவர்களை வரவேற்கும் முகமாக மாநாட்டின் முகப்பில் நிறுவ இருக்கின்றோம்.

அதன் பின்னர் முதலாவது திருவள்ளுவர் சிலையை மாநாட்டின் ஆரம்ப நாளன்று உரும்பிராய் பொது வீதியில் நிறுவுவதற்காக அன்பளிப்பாக வழங்க இருக்கின்றோம். இதனை யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் நிறுவி வைக்க இருக்கின்றார். அதே போல இரண்டாவது திருவள்ளுவர் சிலையை மாநாட்டின் நிறைவில் அம்பாறை மாவட்டம் காரை தீவு பிரதேசத்தில் நிறுவ இருக்கின்றோம். இதனை வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் நிறுவி வைக்க இருக்கின்றார்.

இதேவேளை திருக்குறள் ஆய்வரங்கம் மாநாட்டை பல்வேறு இடங்களில் நடாத்தினாலும் கூட யாழ்ப்பணாத்தில் இந்த மாநாட்டை நடாத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பணாத்தில் இருக்கின்ற தமிழர்களின் தமிழ் மொழியை கையாளுகின்ற விதம் தாய்த் தமிழ் என்று சொல்லுகின்ற தமிழகத்தில் கிடையாது. இங்கு கலப்பு இல்லாமல் தமிழை தமிழாகவே பேசுகின்றார்கள்.

தமிழர்களுடைய பழமையான மொழியினுடைய உணர்வை அப்படியே அழகாகச் சொல்லுகிறார்கள். உண்மையான தமிழ் வாழக் கூடிய இடமாகா யாழ்ப்பாணமாகவே நான் நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் உண்மையான தமிழ் மொழியைப் பேசுகின்ற உணர்வுபூர்வமான தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே எனது கருத்தாக இருக்கிறது. அந்த அடிப்படையிலையே இந்த மாநாட்டை யாழ்ப்பாண மண்ணில் நடாத்த வேண்டுமென்ற சிந்தனையில் இங்கு நடாத்துகின்றோம்.

மேலும் மலேசியாவில் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் இந்தியாவில் மலேசியவில் இருந்து வந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இருந்து பெருமளவிலானவர்கள் வருகை தந்து கலந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே யாழ்ப்பாணத்தில் நடாத்துவது சிறப்பாக இருக்குமென்ற அடிப்படைக் காரணத்தினால் தான் இரண்டாவது மாநாட்டை யாழில் நடாத்துகின்றோம் என்றார்.

ஆகவே யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற உலகத் திருக்குறள் மாநட்டிற்கு அனைவரும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி பங்குபற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு இரண்டாவது மாநாடு யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்த பின்னர் இதன் மூன்றாவது மாநாடு இந்தியாவின் தஞ்சாவூரில் நடாத்துதென்ற தீர்மானத்தையும் இந்த மாநாட்டில் நிறைவேற்ற இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38