ஜெனிவா பிரேரணை குறித்த அரசின் தீர்மானம் பாரதூரமானது : மங்கள 

Published By: R. Kalaichelvan

20 Feb, 2020 | 06:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம்  முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது. பொருளாதார ரீதியில் மோசடியான    நிலைமையினை  தோற்றுவித்துள்ள அரசாங்கம். சர்வதேச மட்டத்தில்  இலங்கையினை தனிப்படுத்தப்படுத்துவம் நடவடிக்கைகளை  மாத்திரமே முன்னெடுக்கின்றது என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.

இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இவர்களே தங்களின் சுய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கம்  2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமையினை பேரவையில் இலங்கையினை காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம். எனவும் தெரிவித்தார்.

 பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொட்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து விலகிக் கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானதாகும்.

ஜெனிவா விவகாரம் மாத்திரமல்ல. வெளிவிவகார கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தற்போது எடுக்கும் தீர்மானங்கள் முற்றிலும் முரண்பாடான எதிர்விளைவுகளை  ஏற்படுத்தும்.

சர்வதேசத்தில் இலங்கை இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுக்கவில்லை. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித  உரிமை பேரவையின் செயலாளர்  நாயகம் பன்கீ மூனிடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றிருந்தால் அவை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டு ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளார்கள். இதற்கு முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பாளியாக காணப்பட்டார்.

யுத்தம் நிறைவடைந்தை தொடர்ந்து அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம்    எவ்விதமான முன்னேற்றகர நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் இல்லை.

இதன் காரணமாகவே நாட்டு தலைவரும், இராணுவ அதிகாரிகளும் மின்சார கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை தோற்றம் பெறும் என்ற  கருத்தும் அப்போத குறிப்பிடப்பட்டன. சர்வதேச பொறிமுறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஜெனிவாவின் அழுத்தமான  நிலைப்பாடாக  இருந்தது.

2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெற்றவுடன்  சர்வதேச உறவினை பலப்படுத்த வேண்டிய தேவையும் காணப்பட்டது.

 சர்வதேச விசாரணைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள்  தொடர்பில்  எழுந்த கேள்விகளுக்கும், முறைப்பாடுகளுக்கும்  இலங்கையிலே உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் இலங்கையின் பொது சட்டத்தின்  பிரகாரம் தண்டனை  பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எவ்வித  பாரபட்சமும் காட்டாது. என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே  நல்லாட்சி அரசாங்கம் 30. 1 பிரேரணைக்கு இணையனுசரனை  வழங்கியது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51