சீனாவே ஆசியாவின் உண்மையான நோயாளி- அமெரிக்க நாளேட்டில் வெளியான கருத்திற்கு சீனா எதிர்ப்பு- செய்தியாளர்களை வெளியேற்றுகின்றது

20 Feb, 2020 | 05:13 PM
image

அமெரிக்காவின் வோல்ட்ஸ்ரீட் ஜேர்னலின் மூன்று செய்தியாளர்களை சீனா தனது நாட்டிலிருந்து திருப்பியனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா என்ற தலைப்பில் வோல்ட்ஸ்ரீட் ஜேர்னலில் கட்டுரையொன்று வெளியானதை தொடர்ந்தே சீனா செய்தியாளர்களை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது.

வோல்ட் ஸ்ரீட் ஜேர்னலின் ஆசிரியர்கள் இவ்வாறான இனரீதியிலான பாகுபாட்டை காண்பிக்கும் தலைப்பை பயன்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் இதுவரையில் வோல்ட்ஸ்ரீட் ஜேர்னல் கவலை தரும் விதத்தில் அதன் கடமைகளை நிறைவேற்றுவதை தவிர்த்து வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

வோல்ட் ஸ்ரீட் ஜேர்னல் இதுவரை எங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அந்த கட்டுரையை எழுதியவர்களிற்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுக்கப்போவதாக அறிவிக்கவில்லை இதனால் அதன் செய்தியாளர்களின் ஊடக அனுமதி இரத்து செய்யப்படுகின்றது என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நடவடிக்கை கடுமையான முன்னர் ஒருபோதும் நடந்திராதது என  வோல்ட் ஸ்ரீட் ஜேர்னலின் தலைமை ஆசிரியர் மட் மரே தெரிவித்துள்ளார்.

சீனா தனது இந்த நடவடிக்கைகளை கைவிடச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மாற்றுக்கருத்தை முன்வைப்பதே சரியான நடவடிக்கை கருத்துசுதந்திரத்தை முடக்குவது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா அனுமதியை இரத்துச்செய்துள்ள செய்தியாளர்களில் ஒருவர் தற்போது வுகானில் தனது உயிரை பணயம் வைத்து செயற்பட்டு அங்குள்ள நிலைமையை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47