பங்­க­ளா­தேஷில் பயங்­க­ர­வாத சம்­ப­வங்­க­ளோடு தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்­ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 145 பேர் பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பங்களாதேஷில் தடைச்செய்யப்பட்ட ஜமாதுல் முஜாகிடீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த கைது செய்யும் நடவடிக்கைகளில் போதைபொருள் கடத்தல்,களவு மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.