இனங்களை அரவணைக்கும் அரசியலமைப்பு அவசியம்

Published By: J.G.Stephan

20 Feb, 2020 | 02:31 PM
image

இலங்­கையின் சம­கால அர­சியல் யாப்பு பல்­வேறு குழப்ப நிலை­க­ளுக்கும் வித்­திட்­டி­ருக்­கின்­றது. இந்த அர­சியல் யாப்­பினால் நாட்டின் அபி­வி­ருத்தி மற்றும் ஐக்­கியம் உள்­ளிட்ட  பல விட­யங்­களும் கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றன. சம­கால யாப்­பா­னது பல திருத்­தங்­க­ளுக்கும் உள்­ளா­கி­யுள்ள நிலையில் இத்­த­கைய ஒரு யாப்பு இலங்­கைக்குத் தேவை­தானா? என்று பலரும் கேள்­வி­யெ­ழுப்பி வரு­கின்­றனர். இலங்­கை­யர்­க­ளா­கிய நாம் அர­சியல் யாப்பில் நம்­பிக்கை இழந்து விட்டோம். இந்த நம்­பிக்­கையை உண்­மை­யான சட்ட நெறி­களின் மூலம் மீண்டும் ஏற்­ப­டுத்த வேண்டும் என்று புத்­தி­ஜீ­விகள் தொடர்ச்­சி­யா­கவே வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.



புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்கும் முயற்­சிகள் கடந்த காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதும் அவை எதுவும் சாத்­தி­ய­மா­காத நிலையில் இப்­போ­தைய அர­சாங்­கமும் இது குறித்து தனது கவ­னத்­தினை செலுத்தி இருக்­கின்­றது. இந்­நி­லையில் புதிய அர­சியல் யாப்பு ஒன்­றினை உரு­வாக்­கு­கையில் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டிய விட­யங்­களை உள்­ள­டக்­கிய முன்­மொ­ழி­வுகள் அண்­மையில் ‘யுத்­து­கம’ என்ற அமைப்­பினால் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இதுபோல் இன்னும் பல அமைப்­பு­களும் புதிய அர­சியல் யாப்புக் குறித்து பல்­வேறு முன்­மொ­ழி­வு­களை கைய­ளிப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் தெரிய வரு­கின்­றது.

ஒரு நாட்டின் மிக முக்­கிய ஆவ­ண­மாக அர­சியல் யாப்பு விளங்­கு­கின்­றது. இந்த அர­சியல் யாப்­பினை முன்­னி­லைப்­ப­டுத்­தியே காரி­யங்கள் இடம்­பெ­று­கின்­றன. அர­சியல் யாப்பு தொடர்பில் பலரும் பல்­வேறு வரை­வி­லக்­க­ணங்­க­ளையும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். “ஓர் அர­சாங்­கத்தின் அமைப்பு அதா­வது அதன்  துறை­களின் அமைப்பு, அத்­து­றை­க­ளுக்­கென வரை­ய­றுக்­கப்­பட்ட அதி­காரம் அவற்றின் அதி­கார எல்லை, அதனைச் செயற்­ப­டுத்த வேண்­டிய முறை, மக்­களின் உரி­மைகள், கட­மைகள் என்­ப­வற்­றினை உள்­ள­டக்­கி­யதே அர­சியல் யாப்பு என்று அர­சியல் யாப்­பிற்கு வரை­வி­லக்­கணம் கூறு­கின்றார் பிறைஸ் பிரபு. இதே­வேளை  டைசி என்­பவர் “ஓர் அரசின் அதி­காரப் பங்­கீட்­டையும் அத­னது தொழிற்­பாட்­டி­னையும் நிர்­ண­யிக்கக் கூடிய கொள்­கை­களை உள்­ள­டக்­கிய அடிப்­படைச் சட்­டமே அர­சியல் யாப்பு” என்று கூறி­யி­ருக்­கின்றார். என்றி மெயின், கில் கிறைஸ்ட் உள்­ளிட்ட மேலும் பலரும் பல்­வேறு வரை­வி­லக்­க­ணங்­களை அர­சியல் யாப்பு குறித்து கூறி­யுள்­ள­மையும் தெரிந்த விட­ய­மே­யாகும்.

ஜன­நா­யகம் குறித்து இப்­போது சற்று அதி­க­மா­கவே பேசப்­பட்டு வரு­கின்­றது. சாதா­ரண மனி­தர்­களும் அர­சியல் தலை­வர்­களை கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய ஆட்­சியே ஜன­நா­யகம் என்று கூறு­வார்கள். மக்­களால் மக்­க­ளுக்­கான மக்­க­ளாட்­சியே ஜன­நா­யகம் என்று வரை­வி­லக்­கணம் கூறப்­ப­டு­கின்­றது. இந்த வகையில் ஜன­நா­ய­கத்தின் வெற்­றிக்கு உந்­து­சக்­தி­யாக அர­சியல் யாப்பு விளங்­கு­கின்­றது. ஜன­நா­யக ஆட்சி முறையின் முக்­கிய பண்­பு­களில் ஒன்­றாக அர­சியல் யாப்பு காணப்­ப­டு­கின்­றது. அர­சியல் யாப்பு, அர­சி­யல்­வா­திகள் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­ப­டு­வ­தனை தடுக்­கின்­றது. சர்­வா­தி­காரப் போக்­கிற்கும் முற்­றுப்­புள்ளி வைக்­கின்­றது.

ஓர் அர­சொன்றின் அர­சியல் யாப்பு விதி­களை நிர்­ண­யிப்­பதில் பல்­வேறு கார­ணிகள் செல்­வாக்கு செலுத்­து­வ­தாக கலா­நிதி கே.பிர­பா­கரன் போன்­ற­வர்கள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். பழக்­க­வ­ழக்­கங்கள், வழக்­கா­றுகள், மதக்­கோட்­பா­டுகள், முன்­னைய சட்­டங்கள், சர்­வ­தேச அழுத்­தங்கள், காலச்­சூழ்­நி­லைகள், ஒழுங்­கு­வி­திகள், நீதி­ப­தி­களின் தீர்ப்­புகள், கடந்­த­கால அனு­ப­வங்கள் குறிப்­பிட்ட காலத்தில் நிலவும் கோட்­பா­டு­களும் கருத்­து­களும் அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­ப­வர்­களின் மீது செல்­வாக்குச் செலுத்தும் கருத்­துக்­களும் அம்­சங்­களும் யாப்பு விதி­களை நிர்­ண­யிப்­பதில் செல்­வாக்குச் செலுத்­து­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இவற்றில் சிலவோ பலவோ செல்­வாக்குச் செலுத்­து­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

“இந்த வகையில் இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் 1972 இல் முத­லா­வது குடி­ய­ரசு யாப்பும் 1978 இல் இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்பும் முன்­வைக்­கப்­பட்­டது. 1947 இல் சோல்­பரி அர­சியல் யாப்பு முன்­வைக்­கப்­பட்­டது. எனினும் இந்த யாப்­புகள் எதிர்­பார்த்த சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­தாத நிலையில் குழப்­பங்கள், முரண்­பா­டுகள் பல­வற்­றிற்கும் வித்­திட்­ட­தையே அவ­தா­னிக்கக்கூடி­ய­தாக இருந்­தது. 1947 இன் சோல்­பரி அர­சியல் யாப்பில் குறை­பா­டுகள் பல காணப்­பட்­டன. இந்த யாப்பின் முக்­கிய அம்­சங்­க­ளாக மகா தேசா­தி­பதி, பாரா­ளு­மன்றம், மந்­தி­ரி­சபை, அர­சாங்க சேவை, நீதிச்­சேவை, சிறு­பான்­மையோர் காப்­பீ­டுகள் போன்­றன அமைந்­தி­ருந்­தன. சோல்­பரி யாப்பில் குறை­பா­டுகள் பலவும் காணப்­ப­டு­வ­தாக அர­சி­யல்­வா­திகள் தொடர்ச்­சி­யாக விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். சோல்­பரி அர­சியல் திட்டம் இலங்கை மக்­களின் பிர­தி­நி­தி­க­ளினால் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. முற்­றாகப் பிரித்­தா­னி­ய­ரான சோல்­ப­ரி­யினால் உரு­வாக்­கப்­பட்­டது. பாரா­ளு­மன்ற சட்ட ஆக்கம் தொடர்­பாக போதிய இறை­மையை கொண்­டி­ருக்­க­வில்லை. நிய­மன உறுப்­பினர் பத­விகள் மக்­க­ளாட்சிக் கோட்­பாட்­டிற்கு தடை­யாக இருந்­தது என்­றெல்லாம் யாப்­பிற்கு எதி­ராகக் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

மேலும் சிறு­பான்மை மக்­களின் நலன்­களைப் பாது­காக்­க­வென சிறு­பான்­மையோர் காப்­பீ­டுகள் சோல்­பரி யாப்பில் இடம்­பெற்­றி­ருந்­தன. அர­சி­ய­ல­மைப்பின் 29 ஆம் பிரிவு, செனட் சபை, நிய­மன உறுப்­பி­னர்கள், பல அங்­கத்­தவர் தேர்தல் தொகுதி, கோமறைக் கழகம், அர­சி­ய­ல­மைப்­பினை திருத்­து­வதில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை, பொதுச்­சேவை ஆணைக்­குழு மற்றும் நீதிச்­சேவை ஆணைக்கு என்­பன சிறு­பான்­மையோர் நலன்­பேணும் ஏற்­பா­டு­க­ளாக அமைந்­தி­ருந்­தன. எனினும் இவை­யெல்லாம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு உரிய சாதக விளை­வு­களை மழுங்­காத நிலையில் ஏட்டுச் சுரைக்­கா­யாகி இருந்­த­தையே அவ­தா­னிக்கக்கூடி­ய­தாக இருந்­தது. இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் வாக்­கு­ரிமை மற்றும் பிர­ஜா­வு­ரிமை பறிப்பு, 1956 இன் தனிச் சிங்­களச் சட்டம், சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான ஒப்­பந்­தங்கள் எனப் பலவும் சோல்­பரி யாப்பு நடை­மு­றையில் இருந்த காலத்தில் இடம்­பெற்ற நிலையில் சிறு­பான்­மையோர் காப்­பீ­டுகள் கேள்­விக்­குறி­யாகி இருந்­தன.

சோல்­பரி யாப்பின் குறை­பா­டு­களை சுட்­டிக்­காட்டி 1972 இல் முத­லா­வது குடி­ய­ரசு யாப்பு முன்­வைக்­கப்­பட்­டது. எனினும் இந்த யாப்பும் நாட்டு மக்­களை ஏமாற்றி இருந்­தது. குறிப்­பாக சிறு­பான்­மை­யி­னரின் நலன்­களை இந்த யாப்பு பேணு­வ­தாக இல்லை. சிங்­கள மொழியை மட்டும் அர­ச­க­ரும மொழி­யாக ஆக்­கி­யதன் மூலமும் பெளத்த மதத்தை அரச மத­மாக ஆக்­கி­யதன் மூலமும் இந்­நாடு சிங்­கள பெளத்த நாடு என்ற கருத்து வளர்க்­கப்­பட்­டுள்­ளது.

அர­சியல் திட்­டத்தில் வலு­வே­றாக்கம் காணப்­ப­ட­வில்லை. தேர்தல் முறை குறை­பா­டு­களை கொண்­டி­ருந்­தது என்­றெல்லாம் முத­லா­வது குடி­ய­ரசு யாப்­பிற்கு எதி­ராகக் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இக்­கு­றை­பா­டு­களை சுட்­டிக்­காட்டி புதிய அர­சியல் யாப்பு தேவை என்று வலி­யு­றுத்­தல்­க­ளுக்­க­மைய இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்பு 1978 இல் தோற்றம் பெற்­றது. சம­கா­லத்­திலும் இந்த அர­சியல் யாப்பே நடை­மு­றையில் இருந்து வரு­கின்­றது. எனினும் இந்த சம­கால யாப்பும் பலரின் விமர்­ச­னத்­திற்கும் உள்­ளாகி இருக்­கின்­றமை நீங்கள் அறிந்த விட­ய­மாகும்.

1978 ஆம் ஆண்டு அர­சியல் யாப்பில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தேர்தல் முறை உட்­கட்சிப் பூசல்­க­ளுக்கு வித்­தி­டு­கின்ற அதே­வேளை பிர­தி­நி­தி­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் இடை­யி­லான இடை­வெ­ளியை அதி­க­ரிக்கச் செய்­தி­ருப்­ப­தாக கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. நாட்டின் அபி­வி­ருத்தி மற்றும் ஐக்­கியம் என்­ப­வற்­றுக்கு சவா­லாக சம­கால தேர்தல் முறையும் அர­சியல் யாப்பும் இருந்து வரு­வதாக விச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. 1978 ஆம் ஆண்டு யாப்­பான சம­கால அர­சியல் யாப்பில் பல திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 1979 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி முத­லா­வது திருத்தம் ஊர்­ஜிதம் செய்­யப்­பட்­டது. 1978 ஆம் ஆண்டு இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்பின் முத­லா­வது திருத்தம் யாப்பின் 140 ஆவது சரத்­தோடு சம்­பந்­தப்­பட்­ட­தாகும். அதன்­படி 140 ஆவது சரத்­தினை உடன் அடுத்து பின்­வரும் வாச­கங்கள் சேர்க்­கப்­பட வேண்­டு­மென விதிக்­கப்­பட்­டது. “இந்த சரத்தின் முன்­னைய விதி­களின் பிர­காரம் பாரா­ளு­மன்றம் சட்­டத்தின் மூலம் எந்த குறிப்­பிட்ட தொகு­தி­யான வழக்­கு­களில் சட்­டத்தில் குறிக்­கப்­பட்ட பிர­காரம் மேல்­முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு வழங்­கப்­பட்ட நியா­யா­திக்­கத்­தினை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­ற­மல்ல உயர்­நீ­தி­மன்­றமே நிர்­வ­கிக்கும்”

1986 இல் பத்­தா­வது திருத்­தமும், 2001 இல் 17 ஆவது திருத்­தமும், 2010 இல் 18 ஆவது திருத்­தமும் மேற்­கொள்­ளப்­பட்­டன. சம­கால அர­சியல் யாப்பு திருத்­தங்கள் பல­வற்­றுக்கும் உள்­ளா­கி­யுள்ள நிலையில் இந்த யாப்பில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தனை விடுத்து புதிய அர­சியல் யாப்பு ஒன்­றினை முன்­வைக்க வேண்டும் என்று முக்­கி­யஸ்­தர்கள் பலரும் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர். புதிய அர­சியல் யாப்பின் அவ­சி­யத்தை எல்­லோரும் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். திருத்­தங்கள் மூலம் மாத்­திரம் முன்­னேற முடி­யாது. புதிய தேர்தல் முறை, நீதித்­துறை, அடிப்­படை உரி­மைகள் போன்ற பல்­வேறு விட­யங்­க­ளை­யிட்டு காலத்­திற்குக் காலம் திருத்­தங்­களை மேற்­கொள்­வதை விடுத்து புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றைத் தயா­ரிப்­பதே உசி­த­மா­னது. அதனை தேர்­தலின் பின்னர் புதிய பாரா­ளு­மன்றம் மேற்­கொள்ள வேண்­டிய பிர­தான நட­வ­டிக்­கை­யா­கவே மேற்­கொள்­ளலாம். நான்  அறிந்­த­வரை இதற்கு ஒரு உடன்­பாடு உண்டு. எமது அர­சியல் யாப்பு எவ்­வாறு அமைய வேண்­டு­மென நாம் கலந்­து­ரை­யாட முடியும் என்று கலா­நிதி ஜயம்­பதி விக்கிரமரட்ண கடந்த 2015 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கமும் அதற்கு முன்­னைய அர­சாங்­கங்­களும் புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­வது தொடர்பில் கவனம் செலுத்தி இருந்­தன. எனினும் எது­வித சாத­க­மான விளை­வு­களும் ஏற்­ப­ட­வில்லை. புதிய அர­சியல் யாப்பு விடயம் இழு­பறி நிலை­யி­லேயே இருந்து வரு­கின்­றது. இத­னி­டையே புதிய அர­சியல் யாப்பு குறித்த பேச்­சுகள் இப்­போது மீண்டும் அடி­படு­கின்­றன. மேலும் புதிய அர­சியல் யாப்பின் அவ­சி­யத்­தினை ஆளும் தரப்­பி­னரும், எதிர்த்­த­ரப்­பி­னரும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இதே­வேளை புதிய அர­சியல் யாப்பு ஒன்­றினை உரு­வாக்­கு­கையில் கவ­னத்தில் கொள்ள வேண்­டிய விட­யங்­களை உள்­ள­டக்­கிய முன்­மொ­ழி­வுகள் அண்­மையில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷவிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த முன்­மொ­ழி­வு­களை ‘யுத்­து­கம’ என்ற அமைப்பு ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­துள்­ளது. இந்­நி­லையில் சம­கால அர­சி­ய­ல­மைப்பு அதி­ருப்­திக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில் நாட்டின் அபி­வி­ருத்தி, ஐக்­கியம் மற்றும் பல்­லின மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தக்கூடிய புதிய அரசியல் யாப்பின் உருவாக்கத்திற்கும் முன்வைப்பிற்கும் சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.

– துரைசாமி நடராஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21