நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைதுசெய்ய முடியாது - நீதிமன்றம் அறிவிப்பு!

Published By: Vishnu

20 Feb, 2020 | 08:56 PM
image

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை உரிய நீதிவான் நீதிமன்றின் உத்தரவின்றி கைது செய்தல் கூடாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. 

தன்னை கைது செய்வதை  தடுத்து இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரீட்  மனுவை இன்று இரண்டாவது தடவையாக ஆராய்ந்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதன் ஊடாக அவருடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58