பிரேரணையிலிருந்து விலகினால் மாற்று ஏற்பாட்டுக்குத் தயார் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

20 Feb, 2020 | 11:35 AM
image

(ரொபட் அன்டனி)

ஜெனிவா பிரேர ணையிலிருந்து விலகப்போவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தால்  அடுத்தகட்ட மாற்று நடவடிக்கைக்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுவரை அமுலாகும் வகையில்  இலங்கையின் இணை அனுசரணையுடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை ஓர் உரையாற்றுவதன் மூலம் விலக முடியாது.  அவ்வாறு அமைச்சர் தினேஷ்  குணவர்த்தன அறிவிப்பதால் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையில்  2015 ஆம் ஆண்டு 30–1 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டு தற்போது 40–1 என்ற பெயரில் அமுலிலுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை விலகப்போவதாக தெரிவிக்கப்படுகின்றமை மற்றும் எதிர்வரும் 26 ஆம் திகதி   வெ ளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன  ஜெனிவாவில் உரையாற்றவுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே  அவர்  இதனை குறிப்பிட்டார்.

தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  இது தொடர்பில்  மேலும் குறிப்பிடுகையில்

ஜெனிவா பிரேரணை விடயத்தில்  இவ்வாறு நடக்கும் என்பதனை நாங்கள் அறிந்திருந்தோம்.  அரசாங்கம் இவ்வாறு  பிரேரணையிலிருந்து விலகும் என்று  நாங்கள் அறிந்திருந்தோம்.  அதனால்தான் ஏற்கனவே நாங்கள்    சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம்.  

முதலில்  எதி்ர்வரும் 2021 ஆம் ஆண்டுவரை அமுலாகும் வரை  இலங்கையின் இணை அனுசரணையுடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை  விலக முடியாது.  பிரேரணையிலிருந்து விலகுகின்றோம் என்று ஒரு உரையாற்றுவதன் மூலம்  கூறுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.  ஆனால் அவ்வாறு  அரசாங்கம்  உரையாற்றுவதை யாரும் தடுக்கவும் முடியாது.

இந்நிலையில் அரசாங்கம்  பிரேரணையிலிருந்து விலகுவதாக அறிவித்தால் அடுத்த மாற்று ஏற்பாடு குறித்து நாங்கள் சிந்திக்கவேண்டும்.    அதற்கான களநிலைவரத்தை ஆராயவே நான் சில தினங்களுக்கு முன்னர் ஜெனிவா  சென்று  மனித உரிமை பேரவையின்  உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் உரையாற்றியிருந்தேன்.

சென்று  மனித உரிமை பேரவையின்  உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது  அரசாங்கம் இவ்வாறு பிரேரணையிலிருந்து விலகுவதாக அறிவிக்கலாம் என்று நான் கூறியிருந்தேன்.

இந்த சூழலை எதிர்கொள்ள நாம் தயாராகவேண்டும். அரசாங்கம்  இதிலிருந்து விலகினால் நாங்கள் மாற்று ஏற்பாட்டுக்கு தயாராக இருக்கின்றோம். எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுவரை இந்த பிரேரணை அமுலில் இருக்கும். ஆனால் அதிலிருந்து விலகுவதாக அரசாஙகம் கூறினால் நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கவேண்டும்.  இது தொடர்பில்  நான் ஏற்கனவே  பல பேச்சுவார்த்தைகளை உறுப்பு நாடுகளுடன் நடத்தியுள்ளேன். எப்படியும் அரசாங்கம்  இவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட மாற்று ஏற்பாட்டை முன்னெடுக்க நாமும் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47