குடியிருப்பு காணிகளை மீட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை

Published By: Digital Desk 4

20 Feb, 2020 | 10:40 AM
image

திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அடாத்தாக பிடித்த இடங்களை மீட்டுத் தருமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1962 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆரம்பம் தொட்டு குடியிருந்த வந்துள்ளதாகவும் 1990 களில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம் பெயர்ந்ததாகவும் குடியிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர். பல வருட காலமாக குடியிருப்பு பகுதிகளை அமைத்து வாழ்ந்து வந்தமைக்கான காணி அனுமதிப்பதாதிரங்களுக்கான ஆதாரங்கள் இருந்த போதிலும் பொது மக்களுடைய காணிகளை உரியவர்களுக்கு இது வரை வழங்கப்படவில்லை என தெரிவித்த மக்கள் இதில் சுமார் 175 ஏக்கர் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மக்கள் குடியிருந்ததற்கான ஆதாரங்கள் இருந்த போதிலும் உரிய காணிகளை மீட்டுத்தரவில்லை என குற்றம் சுமத்துகின்றனர் .

அப்பகுதியில் உள்ள பள்ளிவாயல் மட்டுமே தங்களுக்கு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருவதற்கு உரிய அதிகாரிகள் மறுப்பதாகவும் மேலும் அங்கலாய்க்கின்றனர்.

முத்து நகர் கிராமம் என்பது ஒரு பழமை வாய்ந்த கிராமமாகும் இதனை ஆரம்பம் தொட்டு வெங்காயச் சேனை என்றும் அழைத்து வந்தனர். 74 குடும்பங்கள் அக்காணியில் குடியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல முறை உரியவாறு காணிகளை மீட்பதற்காக உரிய அதிகாரிகளிடம் சென்றபோதும் தங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என கண்ணீர் துடைக்கின்றனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அடாத்தாக பிடித்த காணிகளை உரிய அரச அதிகாரிகள் தங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01